Wednesday, November 20, 2024

துயர்பகிர்வு

  


திரு. இராசைய்யா(SKR) திரவியநாதன் (திரவியம்)                                                                  சோளங்கன்,                                                                                                                                      கரணவாய் மேற்கு,                                                                                                                            கரவெட்டி   

யாழ்,சோளங்கன், கரணவாய்  மேற்கை பிறப்பிடமாகவும் அச்சுவேலி  பத்தமேனியை  வதிவிடமாகவும் கொண்ட  திரு. திரவியநாதன் (திரவியம்) அவர்கள்  இன்றைய தினம்(20.11.2024) புதன்கிழமை இறை நிலையடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறிய தருகின்றோம். 

அன்னார்  காலம் சென்ற இராசைய்யா, இரத்தினம்  ஆகியோரின் பாசமிகு மகனும்,  அமரர்களான இரத்தினம், பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,  பாவனியின்  ஆருயிர் கணவரும், தர்சினி (சுஜி-கனடா)கஜானி (கஜா -சுவிஸ்), அஜந்தினி  ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,  அமரர்களான திருச்செல்வம்(செல்வம்), யோகநாதன் (யோகம்) மற்றும் சரோஜாதேவி(சரோஜா), ஜெயக்குமார் (குமார் - ஜேர்மனி),ஜெயந்திமாலா, பாஸ்கரன் (சுவிஸ்), ஸ்ரீதரன் ஆகியோரின்  பாசமிகு சகோதரரும் ஆவார்.  அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


தகவல்: உறவுகள்

Friday, October 11, 2024

கரணவாய் மகா வித்தியாலயத்தின் பரிசில் தினம்-2024!

கரணவாய் மகா வித்தியாலயத்தின்  பரிசில் தினம் 16.10.2024 (புதன்கிழமை)  பாடசாலை முன்றலில் இடம்பெறவுள்ளது.  பாடசாலை தலைமை ஆசிரியர் திரு. சிவபாதம் சிவகணேசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில்,   பிரதம விருந்தினராக  பாடசாலையின்  பழைய மாணவியும்- கரணவாய் மகாவித்தியாலயம் (B.SC Hons in Engineering Minclox Techno PVT Ltd) நிறுவனத்தின்  பொறியியலாளருமான  செல்வி. சாளினி  விஜயராசா,  சிறப்பு  விருந்தினராக  ஓய்வுநிலை  அதிபர் திரு.சித்திரவேலு  குருகுலசிங்கம்  ஆகியோர் கலந்து கொள்வதுடன்,  க.பொ.த (சா/த)  சித்தியடைந்த  மாணவர்கள்  கௌரவிக்கபடவுள்ளனர்.  பரீட்சையில்  சித்தியடைந்த  மாணவர்களுக்கு  பைசிக்கிள், கற்றல் உபகரணங்கள்  போன்ற   பரிசில்களும் வழங்கி  கெளரவிப்பு செய்யப்படவுள்ளனர். இதற்கான  அனுசரணையை  புலம்பெயர் தேசங்களில்  வசிக்கும்  பழைய மாணவர்கள்  what’s app குழுமம் ஒன்றை  உருவாக்கி  அதன் ஊடாக பழைய மாணவர்களை அணிதிரட்டி  மாணவர்களின்  கல்விக்கு ஊக்கமளித்து வருகின்றனர். கடந்த  3 ஆண்டுகளாக  இவ்வாறாக  புலம்பெயர் பழைய மாணவர்கள்  பாடசாலையின் வளர்ச்சிக்கு  ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வருகின்றனர்.  இதுவரை  இணைந்து கொள்ளாத  பழைய மாணவர்களும்  இணைந்து கொள்வதன்  மூலம்  பாடசாலையின் வளர்ச்சிக்கு  உதவிட முடியும். நடைபெறவுள்ள பரிசளிப்பு நிகழ்வில்  பெற்றோர்கள்,  பழைய மாணவர்கள், ஊரவர்கள் கலந்து கொண்டு  மாணவர்களின்  ஆற்றலை  ஊக்கப்படுத்தி கெளரவிக்குமாறு பாடசாலை சமூகம் வேண்டி நிற்கிறது.

Friday, October 4, 2024

துயர்பகிர்வு!

திரு. நடேசபிள்ளை கனகரட்ணம்((காடி) 
சோளங்கன்
கரணவாய் மேற்கு 
கரவெட்டி


கரணவாய் மேற்கு கரவெட்டியைச் சேர்ந்த திரு.கனகரட்ணம் அவர்கள் இன்று சனிக்கிழமை (05.09.2024) அன்று அவரது இல்லத்தில் இயற்கையெய்தினார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். 

அன்னார் காலம் சென்ற நடேசபிள்ளை செல்லம்மா (செல்லாச்சி) அவர்களின் அன்பு புதல்வரும், அமரர்களான திரு.திருமதி. நாகமுத்து அவர்களின் மருமகனும், காலம் சென்ற வள்ளியம்மா (வள்ளியாச்சி) அவர்களின் ஆருயிர் கணவரும், உமாகாந்தன் (உமா - நோர்வே), பவாஸ்காந்தன் (விந்தன் -சுவிஸ்), புவனலோயினி (மேகனா -சுவிஸ்), ஜெயகாந்தன் (நந்தன் லண்டன்), கஜந்தினி (காஞ்சனா - கனடா), தர்சினி, மீனா, அம்பிகா அவர்களின் பாசமிகு தந்தையும், கன்னிகா, நகுலம், அமரர்.விஜயகுமார், பிருந்தா, ஜெயராசா, கேதீசன், திருவாரூரன் ஆகியோரின் மாமாவும், ஹரினி, பிரவீன், ரதுல், பவுசியா, தருஸ், சவிதா, விஜிதா, தமிழ்ஓவியன், யாழ்நிலா, காயத்திரி மதுஷன், சஞ்சய், அபிசன், யதுசன், சுகாசன், அவந்திகா, ஆதீசன் ஆகியோரின் பேரனும், காலம் சென்ற தவமணி, பரமேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். 

அன்னாரின் இறுதி கிரிகைகள் இன்று சனிக்கிழமை (05.09.2024) சோளங்கனில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தகன கிரிகைக்காக பூவரசன்திட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். 
தகவல்: உறவுகள்

Sunday, June 11, 2023

துயர் பகிர்வு!




திருமதி. சண்முகம்  வள்ளியம்மை (சுதிரம்)  
சோளங்கன்  
கரணவாய் மேற்கு,  
கரவெட்டி  

யாழ் கரணவாய் மேற்கு சோளங்கனைச்  சேர்ந்த திருமதி. வள்ளியம்மை (சுதிரம்) அவர்கள் 12.06.2023 திங்கள்கிழமை இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறிய தருகின்றோம். 

அன்னார் காலம் சென்ற சுப்பிரமணியம் சித்திரம் அவர்களின் பாசமிகு மகளும், அமரர்களான  கந்தைய்யா  அவர்களின்  மருமகளும்  அமரர். சண்முகம்  அவர்களின் ஆருயிர் துணைவியும், ஜெயலலிதா (ஜெயா)  அவர்களின்  பாசமிகு அம்மாவும்,  காலம் சென்ற இரத்தினம், தம்பிரசா (ராசா- சுவிஸ்), குணம் (சுவிஸ்), ரவிக்குமார் (ரவி - கனடா)  அவர்களின் அன்பு சகோதரியும்,  அமரர்களான  நல்லைய்யா, முத்தைய்யா (க. மு.மண்டான் சுருட்டு), மற்றும் வைத்திலிங்கம் அவர்களின் மைத்துணியும்,  ஸ்ரீஸ்கந்தராசா (குட்டி) அவர்களின் மாமியும், கோகுலநாதன், ஜெனிதா, கோகுலதாஸ், கோகுலராஜ், கோகுலதீபன்  ஆகியோரின் பாசமிகு  அம்மம்மாவும்  ஆவார்.

இறுதி கிரிகைகள் பற்றிய தகவல்   பின்னர் அறியதரப்படும்.  இவ் அறிவித்தலை  உற்றார். உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு  கொள்ளப்படுகின்றனர்.    

தொடர்பு களுக்கு : 4164592609,  647-2831944, 514 - 2955416, 

 தகவல்: உறவுகள் 

Wednesday, May 17, 2023

துயர் பகிர்வு!

 



திரு.கிருஷ்ணபிள்ளை  சிவகுமார் (சிவா)  

சோளங்கன்

கரணவாய் மேற்கு

கரவெட்டி  


கரணவாய் மேற்கு சோளங்கனை  பிறப்பிடமாகவும்வதிவிடமாகவும் கொண்  திருசிவகுமார் (சிவாஅவர்கள்  வியாழக்கிழமை(18.05.2023) அன்று இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை  அழ்ந்த துயருடன்அறிய தருகின்றோம்


அன்னார்  திருகிருஷ்ணபிள்ளை  காலம் சென்ற  ரேவதியம்மா   அவர்களின் அன்பு புதல்வரும்,  காலம் சென்ற  சின்னத்துரை  கனகமுத்து  தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,  கிருபா தேவி (கிருபா வர்களின்  ஆருயிர்  கணவரும்அஞ்சித்தாபிரசோன்சாரு  ஆகியோரின்  அன்பு தந்தையும்,   திருராசன்செல்வகுமார் (சுவிஸ்), சுகாஜினி (சுவிஸ்), சுகந்தினி (பிரான்ஸ்), பாலகுமார் ஆகியோரின் ன்பு சகோதரரும்,  கிருஷ்ணராசா (தம்பி - சுவிஸ்),  தர்மகுலதேவி,  சாந்தா குலதேவி (சுவிஸ்),  மகேந்திரராசா(சிவம் - சுவிஸ்), அனுசியா (சுவிஸ்), குலசிங்கம் (அப்பன் - சுவிஸ்),  றஞ்சினி  ஆகியோரின் மைத்துணரும் ஆவார்.  


இவ் றிவித்தலை  உற்றார்உறவினர்ண்பர்கள்  ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.  இறுதி கிரிகைகள் பற்றிய தகவல்  பின்னர் அறிய தரப்படும்


தகவல் உறவுகள்  


Thursday, April 27, 2023

துயர் பகிர்வு!



திருமதி. சிவானந்தம் லக்ஷ்மிபிள்ளை
சோளங்கன்
கரணவாய் மேற்கு,
கரவெட்டி

யாழ் கரணவாய் மேற்கு சோனங்களைச் சேர்ந்த திருமதி. சிவானந்தம் லக்ஷ்மிபிள்ளை அவர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை(27.04.2023) அன்னாரது இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்ததுயருடன் தெரிவித்து கொள்கின்றோம்.
அன்னார் காலம் சென்ற அமரர். சிவானந்தம் அவர்களின் அன்பு துணைவியும், அமிர்தலிங்கம் வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும், முருகேசு சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், சக்தி, சாந்தினி (ஜேர்மனி), காந்தரூபன் (ரூபன் - ஜேர்மனி), காந்தன் (ஜேர்மனி), .... ஆகியோரின் பாசமிகு அம்மாவும், அமரர் பாலசிங்கம் அவர்களின் அன்பு சகோதரியும்,முத்து, இரத்தினம், சோதி (Garrage -நெல்லியடி) மற்றும் திரவியம், சின்னத்தங்கம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். இறுதி கிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
தகவல்: உறவுகள்

Thursday, April 20, 2023

துயர் பகிர்வு!



திருமதி. கணேசமூர்த்தி(கணேஷ்) வள்ளிபிள்ளை

அல்வாய் / சோளங்கன்

யாழ் கரணவாய் மேற்கு, சோளங்கன் கரவெட்டியை பிறப்பிடமாகவும் அல்வாயை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. கணேசமூர்த்தி(கணேஷ்) வள்ளிபிள்ளை அவர்கள் இன்றைய தினம் இறைநிலை அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறியதருகின்றோம்.
அன்னார் காலம்சென்ற அமரர்.சண்முகம், சிவக்கொழுந்து ஆகியோரின் அன்புமகளும், காலம் சென்ற கணேஷமூர்த்தி அவர்களின் அன்பு துணைவியும், ஜெயந்தி, வசந்தி ..... ஆகியோரின் பாசமிகு அம்மாவும், காலம் சென்ற தங்காமணி, நவரத்தினம் (அரிய குட்டி), சித்திரம், தங்கமுத்து, குருகுலசிங்கம் (சின்னவர்) மற்றும்  அன்னம்மா, ராசாத்தி (சாந்தம்), தேவராசா (தேவர்) ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரிகைகள் அல்வாயில் உள்ள இல்லத்தில் இடம்பெற்று தகனம் செய்யப்பட்டது. இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
குறிப்பு: பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள் பெயர்கள் தவற விடபட்டிருந்தால் பொருட்படுத்த வேண்டாம். தெரிந்தவரை பதிவேற்றம் செய்துள்ளோம்.
தகவல்: உறவுகள்

Saturday, March 25, 2023

துயர் பகிர்வு!




திருமதி. சின்னப்பிள்ளை கந்தசாமி  

சோளங்கன் 

கரணவாய் மேற்கு, 

கரவெட்டி  

கரணவாய் மேற்கு  சோனங்கனைச்  சேர்ந்த திருமதி. சின்னப்பிள்ளை கந்தசாமி அவர்கள் இன்றைய தினம் சனிக்கிழமை (25.03.2023 இயற்கையெய்தினார்  என்ற துயர செய்தியினை  ஆழ்ந்ததுயருடன்  அறிய தருகின்றோம்.  

அன்னார் காலம் சென்ற அமரர். கந்தசாமி அவர்களின் ஆருயிர் துணைவியும், அமரர்களான  திரு.திருமதி.கனகசபை  தம்பதியினரின் அன்பு மகளும் காலம் சென்ற கந்தவனம் - நல்ல பிள்ளை தம்பதியினரின் மருமகளும், சுந்தராம்பாள், தருமாம்பாள், ஜெகதாம்பாள், ஜெகநாதன் ஆகியோரின் பாசமிகு அம்மாவும், காலம் சென்ற ரேவதியின்  அன்பு சகோதரியும், காலம் சென்ற  முருகேசு, இராசம்மா, சின்னத்துரை  மற்றும் செல்லப்பாக்கியம் அவர்களின் மைத்துணியும் ஆவார், அன்னாரின் இறுதி கிரிகைகள் நாளையதினம் ஞாயிற்று கிழமை  இடம்பெற்று பூவரசன் திட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

 தகவல்: உறவுகள்

சிவநிலை!



ஸ்ரீ சுப்பிரமணிய குருக்கள் சுந்தரசர்மா
(கண்ணன் ஐயா)
கரணவாய் (கலட்டி பிள்ளையார் ஆலய பிரதமகுரு)

கரணவாய் கலட்டிப் பிள்ளையார் ஆலய குரு ஸ்ரீ சுப்பிரமணிய குருக்கள் சுந்தரசர்மா (கண்ணன் ஐயா) அவர்கள் 24.03.2023 ( வெள்ளிக்கிழமை) இறைநிலை அடைந்தார். ஆழ்ந்து துயருடன் அறிய தருகின்றோம்.
கரணவாய் மற்றும் அதனை சூழவுள்ள மக்களிற்காக பிதிர்க கடமைகள் ஐயா அவர்களே செய்து வைப்பார். ஒர் குருவுக்குரிய கண்ணியத்துடன் மிகவும் அமைதியாகவும், பண்பாகவும், அன்பாகவும் பழகும் கண்ணன் ஐயா சிவபதம் அடைந்த செய்தி ஆழ்ந்த துயரத்தை தந்துள்ளது. ஐயாவின் இறுதி கிரிகைகள் நாளையதினம் ஞாயிற்றுகிழமை (26.03.2023) இடம்பெற்று எல்லங்குளம் இந்து மாயனத்தில் தகனம் செய்யப்படும்.
துர்க்கைப் புல கமலத்தில் துயில் கொள்ளும் ஐயாவின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றோம். 
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

Thursday, March 23, 2023

துயர் பகிர்வு!



திரு. முருகேசு தியாகராசா (தியாகு)                                                                                      சோளங்கன்,கரணவாய் மேற்கு,கரவெட்டி  

யாழ்  கரணவாய் மேற்கு  சோளங்கனைச்  சேர்ந்த திரு.தியாகராசா (தியாகு)  அவர்கள்  22.03.2023 (புதன்கிழமை)  சென்னையில்  காலமானார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறிய தருகின்றோம்.  

அன்னார் காலம்  சென்ற முருகேசு-இராசம்மா தம்பதியினரின் பாசமிகு புதல்வரும்,  அளவெட்டியை சேர்ந்த .....  மருமகனும்  .... கணவரும், பிள்ளைகள்..,  அமரர் செல்வராசா,  சரஸ்வதி, கணேஸ்வரி, செந்திராசா, கந்தராசா ஆகியோரின் அன்பு சகோதரரும்,  அமரர்களான முருகேசு (சபாரத்தினம்), சின்னத்துரை, கந்தசாமி (K.K) ஆகியோரின் மருமகனும்,  செல்லப்பாக்கியம் அவர்களின் பெறாமகனும் மற்றும் சின்னத்துரை, சின்னத்தம்பி ஆகியோரின்  பெறா மகனும், தெய்வானை, வள்ளியம்மை, கனகமுத்து  ஆகியோரின் மருமகனும் ஆவார். 

அன்னாரின் இறுதி  கிரிகைகள்சென்னையில் இடம்பெற்று தகனம் செய்யப்படும்.  இத்தகவலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். 

தகவல் : உறவுகள்