Wednesday, November 20, 2024

துயர்பகிர்வு

  


திரு. இராசைய்யா(SKR) திரவியநாதன் (திரவியம்)                                                                  சோளங்கன்,                                                                                                                                      கரணவாய் மேற்கு,                                                                                                                            கரவெட்டி   

யாழ்,சோளங்கன், கரணவாய்  மேற்கை பிறப்பிடமாகவும் அச்சுவேலி  பத்தமேனியை  வதிவிடமாகவும் கொண்ட  திரு. திரவியநாதன் (திரவியம்) அவர்கள்  இன்றைய தினம்(20.11.2024) புதன்கிழமை இறை நிலையடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறிய தருகின்றோம். 

அன்னார்  காலம் சென்ற இராசைய்யா, இரத்தினம்  ஆகியோரின் பாசமிகு மகனும்,  அமரர்களான இரத்தினம், பாக்கியம் ஆகியோரின் அன்பு மருமகனும்,  பாவனியின்  ஆருயிர் கணவரும், தர்சினி (சுஜி-கனடா)கஜானி (கஜா -சுவிஸ்), அஜந்தினி  ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,  அமரர்களான திருச்செல்வம்(செல்வம்), யோகநாதன் (யோகம்) மற்றும் சரோஜாதேவி(சரோஜா), ஜெயக்குமார் (குமார் - ஜேர்மனி),ஜெயந்திமாலா, பாஸ்கரன் (சுவிஸ்), ஸ்ரீதரன் ஆகியோரின்  பாசமிகு சகோதரரும் ஆவார்.  அன்னாரின் இறுதிகிரிகைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை  உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 


தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment