---------------------------------------------------------------------------------------------------
ஆலயத்தில் கடவுளை வழிபடும் முறை!
13.03.2017
இப்படியாக, எங்கும் நீக்கமற நிறைந்து நின்று நம்மைக் காத்து ரட்சிக்கும் கருணைக் கடவுளை நாம் வணங்க வேண்டும் அல்லவா? அவரை எப்படி வணங்குவது? .... எங்கே வணங்குவது ?
கடவுளை நாம் எங்கும் வணங்கலாம். நம் உள்மனதுக்குள் அவரைத் தியானித்து, அன்புடன் வணங்கலாம்.
நாம் வாழும் வீட்டிலேயே ஒரு பூஜை அறையை அமைத்து, அங்கேயும் கடவுளை வணங்கலாம்.
ஆயினும், திருக்கோயிலுக்குச் சென்று, ஏனைய பக்தர்களுடன் சேர்ந்து கடவுளை வணங்குவதில் உள்ள நன்மைகள் ஏராளம். இதற்கு ஓர் உதாரணம் சொல்லட்டுமா?
சூரிய ஒளி + பஞ்சு = நெருப்பு ?
சூரிய ஒளி சக்தி மிக்கது என்பது உங்கள் எல்லாருக்கும் நன்கு தெரியும். ஒளிச்சக்தி, வெப்ப சக்தி என்னும் இரண்டு வகையான சக்திகள் சூரிய ஒளியில் உள்ளன. ஆனால், வெட்ட வெளியில், சூரிய ஒளி படும்படி சிறு பஞ்சை வைத்துப் பாருங்கள். அது எரிகிறதா ? இல்லை. எவ்வளவு நேரம் சூரிய ஒளியில் வைத்தாலும், அது எரிவதில்லை.
ஆனால், ஒரு கண்ணாடி வில்லையை ( லென்ஸ் ) ச் சூரிய ஒளிக்கு நேரே பிடித்து, அதன் கீழே அந்தப் பஞ்சை வைத்துப் பாருங்கள். என்ன நடக்கிறது ? சூரிய ஒளி ஒரு புள்ளியாகக் குவிந்து அந்தப் பஞ்சிலே படும்போது, சிறிது நேரத்தில் அந்தப் பஞ்சு தீப்பற்றி எரிகிறது.
---------------------------------------------------------------------------------------------------- சிவன் மற்றும் பார்வதிக்கு மொத்தம் 8 குழந்தைகள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
01.03.2017
சிவன் மற்றும் பார்வதிக்கு முருகன், விநாயகர் என்று இரண்டு குழந்தைகள் தான் உள்ளனர் என்று நினைக்காதீர்கள். சிவன் மற்றும் பார்வதிக்கு மொத்தம் 8 குழந்தைகள் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
மும்மூர்த்திகளுள் ஒருவர் தன் சிவபெருமான். நம் அனைவருக்கும் தெரிந்து சிவன் மற்றும் பார்வதிக்கு விநாயகர், முருகன் என்று இரண்டு குழந்தைகள் இருப்பது தெரியும். ஆனால் நமக்கு தெரியாமல், சிவன் மற்றும் பார்வதிக்கு மேலும் 6 குழந்தைகள் உள்ளனர் என்பது தெரியுமா?ஆம், சிவன் மற்றும் பார்வதிக்கு மொத்தம் 8 குழந்தைகள் இருப்பதாக சிவ புராணம், லிங்க புராணம் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியின் குழந்தைகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அந்தகா
ஒருமுறை பார்வதி தேவி சிவனின் கண்களை கட்டினார். அப்போது சிவபெருமானின் வியர்வை துளியில் ஒரு குழந்தை பிறந்தது. அந்த குழந்தை கண் பார்வை இல்லாமல் பிறந்தது. அப்போது ஹிரான்யக்ஷா என்னும் மன்னன், சிவனிடம் குழந்தை வரம் கேட்க, தன் வியர்வையால் உருவான குழந்தையைக் கொடுத்தார்.
மானசா
சிவனின் விந்து நாக தேவதை சிலையின் மீது பட்டதால் பிறந்தவர் தான் மானசா என்று சில புராணங்கள் கூறுகின்றன.
குஜா
சிவபெருமான் தியானத்தில் இருக்கும் போது, அவரது மார்பில் இருந்து சக்தி வாய்ந்த ஒரு கதிர்வீச்சினால் உருவானவர் குஜா என்று சில கதைகள் கூறுகின்றன.
ஜோதி
ஜோதியைப் பற்றி இருவேறு கதைகள் உள்ளன. அதில் ஒன்று இவர் சிவபெருமானின் ஒளிவட்டத்தில் இருந்து பிறந்தவர் என்றும், மற்றொரு கதை பார்வதி தேவியின் நெற்றியில் இருந்து வந்த தீப்பொறியில் இருந்து வந்தவர் என்றும் கூறுகின்றன.
ஐயப்பன்
ஐயப்பனைப் பற்றி கட்டாயம் அனைவருக்குமே தெரியும். இவர் சிவன் மற்றும் மோகினி அவதாரம் எடுத்த விஷ்ணுவிற்கு பிறந்தவர்.
அசோக சுந்தரி
விநாயகரைப் போன்றே, இவரும் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்டவர். அதுவும் பார்வதி தேவியின் தனிமையைக் குறைக்கவே இவர் உருவாக்கப்பட்டதாக கதைகள் கூறுகின்றன.
முருகப்பெருமான்
சிவன் மற்றும் பார்வதியின் மூத்த மகன் தான் முருகப்பெருமான். இவர் இயற்கை வழியில் சிவன் மற்றும் பார்வதிக்கு பிறந்தவராவார்.
விநாயகர்
சிவன் மற்றும் பார்வதியின் குழந்தைகளுள் மற்றொரு முக்கியமானவர் தான் முதன்மைக் கடவுளான துன்பங்களைப் போக்கும் விநாயகர்.
___________________________________________________________________________________

இறைவன் இல்லாத இடமேயில்லை. அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். பக்தர்கள் ஒன்றாகக் கூடி இறைவனை வணங்குவதற்குரிய இடம் திருக்கோயில் ஆகும். திருக்கோயிலில் இறைவனின் பிரசன்னம் நிறைந்திருக்கின்றது.
அமைதியான ஆற்றங்கரை, கடற்கரை, திருக்குளத்தின் கரை, பூங்காவனம் முதலியவற்றிலும், ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து கடவுளை வழிபடலாம்.
ஆயினும், நாம் நினைத்த நேரத்திலெல்லாம் திருக்கோயில் சென்று வழிபட முடியாது.
நாம் அமைதியாக கடவுளை வணங்க விரும்புகிறோம். எனினும் அன்று கோவிலில் திருவிழா நாளாக அல்லது ஒரு விசேட நாளாக இருந்து மிக அதிக பக்தர்கள் வருவதன் மூலம் நீங்கள் விரும்பும் அமைதி அங்கே கிடைக்காது.
சிலவேளைகளில் சிலரது வீடுகளில் நிகழக் கூடிய பிறப்பு, இறப்பு போன்ற காரணங்களால் உண்டாகக் கூடிய 'தொடக்கு' எனப்படும் புனிதம் இல்லாத காலப்பகுதியில் கோவிலுக்கு செல்ல முடியாது.
இந்த காலப் பகுதி அவரவர் குடும்ப, சமுக பாரம்பரிய வழக்கத்தின பொறுத்து மாறுபடும். (இந்த 'தொடக்கு', ஒரு அந்தணர் வீட்டிற்கு வந்து பூஜை செய்வதன் மூலம் முடிவுக்கு வரும்)
ஆகவே, திருக்கோயிலுக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் நமது வீட்டிலேயே தினமும் இறைவனை வணங்குவது நல்லது. முக்கியமான தினங்களில் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.
கடைப் பிடிக்க வேண்டிய சில ஒழுங்கு முறைகள்
நமது வீடுகளில் இறைவனை வணங்கும்போது சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவை பின்வருமாறு:
பூஜை அறை
நாம் குடியிருக்கும் வீட்டின் நடுப்பகுதியில், கடவுள் வணக்கத்துக்குரிய ஒரு பூஜை அறையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. பூஜை அறையை ஏற்படுத்திக் கொள்ள வசதியில்லாதவர்கள், வீட்டில் சுத்தமான பகுதியில், ஒரு சுவரில் கடவுள் படங்களைத் தொங்கவிட்டு வழிபடலாம். தவறில்லை.
பூஜை அறையில், மரத்திலான அல்லது ஏதேனும் உலோகத்திலான இறை விக்கிரகங்கள், படங்கள் போன்றனவைகளை பயன்படுத்தலாம். கருங்கல்லினால் ஆனா விக்ரகங்கள் கோவில்களில் மட்டுமே பயன்படுத்தப் படுவதனால் வீடுகளில் பயன் படுத்தக் கூடாது.
இறைவன் இல்லாத இடமேயில்லை. அவர் எங்கும் நிறைந்திருக்கிறார். பக்தர்கள் ஒன்றாகக் கூடி இறைவனை வணங்குவதற்குரிய இடம் திருக்கோயில் ஆகும். திருக்கோயிலில் இறைவனின் பிரசன்னம் நிறைந்திருக்கின்றது.
அமைதியான ஆற்றங்கரை, கடற்கரை, திருக்குளத்தின் கரை, பூங்காவனம் முதலியவற்றிலும், ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து கடவுளை வழிபடலாம்.
ஆயினும், நாம் நினைத்த நேரத்திலெல்லாம் திருக்கோயில் சென்று வழிபட முடியாது.
நாம் அமைதியாக கடவுளை வணங்க விரும்புகிறோம். எனினும் அன்று கோவிலில் திருவிழா நாளாக அல்லது ஒரு விசேட நாளாக இருந்து மிக அதிக பக்தர்கள் வருவதன் மூலம் நீங்கள் விரும்பும் அமைதி அங்கே கிடைக்காது.
சிலவேளைகளில் சிலரது வீடுகளில் நிகழக் கூடிய பிறப்பு, இறப்பு போன்ற காரணங்களால் உண்டாகக் கூடிய 'தொடக்கு' எனப்படும் புனிதம் இல்லாத காலப்பகுதியில் கோவிலுக்கு செல்ல முடியாது.
இந்த காலப் பகுதி அவரவர் குடும்ப, சமுக பாரம்பரிய வழக்கத்தின பொறுத்து மாறுபடும். (இந்த 'தொடக்கு', ஒரு அந்தணர் வீட்டிற்கு வந்து பூஜை செய்வதன் மூலம் முடிவுக்கு வரும்)
ஆகவே, திருக்கோயிலுக்குச் செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் நமது வீட்டிலேயே தினமும் இறைவனை வணங்குவது நல்லது. முக்கியமான தினங்களில் கோயிலுக்குச் சென்று வழிபடலாம்.
ஒரு பூஜை அறை (சாமி அறை)
பூஜை அறை அமைப்பதில் ஒரு கட்டாயமான கட்டுப் பாடுகள் எதுவும் இல்லை எனினும் சில அறிவு பூர்வமான செயல் பாடுகள் தேவை. உதாரணமாக நாம் மாமிச உணவு சமைக்கப் படும் சமையல் அறைக்கு பக்கமாக, பூஜை அறை அமைக்காமல் தவிர்க்கலாம். மேலும் மாமிச உணவு உண்டால், பூஜை அறைகோ, கோவிலுக்கோ அடுத்தநாள் குளித்து சுத்தமாகும் வரை போவதனை தவிர்க்கலாம்.
பூஜை அறை விக்ரகங்கள், சாமி படங்கள்
பூஜை அறையில், சுவரில் இறைவன் திருப்படங்களை அல்லது திரு உருவச் சிலைகளைக் கிழக்குத திசையைப் பார்த்தவண்ணம் அமைக்க வேண்டும். இறைவன் உருவங்கள் கிழக்குத் திசையைப் பார்த்தவண்ணம் இருக்க, வணங்கும் பக்தர்கள் வடக்குத் திசையாக நின்று வணங்க வேண்டும்.
குறிப்பு: பூஜையறையில் எந்தத் தெய்வத்தின் படத்தை வைக்க வேண்டும் என்று சிலர் கேட்கிறார்கள். இந்து சமயத்தின் தத்துவங்களின்படி, இறைவனை நாம் பல உருவங்களில் வழிபட முடிகிறது. இறைவன் பலவிதமான குணங்களை, சக்திகளை உடையவர்.
அந்தக் குணங்களுக்கும், சக்திகளுக்கும் ஏற்றபடி அவரது உருவங்கள் வேறு வகைப்படுகின்றன. ஆகவே, நம் தேவைக்கும், வேண்டுதலுக்கும் ஏற்ற விதத்தில் தெய்வத்தை வணங்குகின்றோம்.
உதாரணமாக, புதிதாக ஒரு முயற்சியைத் தொடங்கும்போது, விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமானை வணங்குகின்றோம்; கல்வியில் வெற்றியை வேண்டும்போது, சரஸ்வதி தேவியை வணங்குகின்றோம்; பணம் வேண்டும் என்று விரும்பும்போது, லக்ஷ்மி தேவியை வணங்குகின்றோம். ஆனால், சரஸ்வதியும், லக்ஷ்மியும் ஒரே தேவியின் இரு வடிவங்களே.
நாம் உளமார, மனமுருகி எந்தத் தெய்வத்தை வழிபடுகின்றோமோ, அதே உருவத்தில் இறைவன் தோன்றி நமக்கு அருள் புரிவார் என்பது பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ண பகவான் சொன்ன வேதம்.
தீப விளக்கு (குத்து விளக்கு)
பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். விளக்கில் சுத்தமான பஞ்சினாலான திரியை இட்டு, நெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது இலுப்பெண்ணெய் கொண்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபமும் கிழக்கு முகமாக நோக்கி வைக்க வேண்டும். ஆனால், அந்த விளக்கின் நிழல் கடவுள் படங்களின்மீதோ, சிலைகளின்மீதோ படக்கூடாது.
காலை, மாலை என இரு வேளைகளிலும் பூஜை செய்யலாம். அதற்கு நேரம் இல்லாதவர்கள் காலையில் தூய நீர் கொண்டு பூஜை செய்து, மாலையில் திருவிளக்கேற்றி வணங்கலாம்.
பூஜை, பிராத்தனை நேரங்கள் எமது வீடு என்பதால் நாம் விரும்பும் எந்நேரத்திலும் இறைவனை வணங்கலாம். பூஜை செய்யலாம்.
பூஜை அறை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தமான தண்ணீரால் பூஜை அறையைக் கழுவி, பின் மஞ்சள் கலந்த நீர் தெளித்து விடலாம்.
தினமும், காலையில் சுத்தமாகக் குளித்து, திருநீறு அல்லது திருநாமம் தரித்துக்கொண்டு, பின்பு பூஜைக்குரிய இடத்தைச் சுத்தம் செய்து, திருவிளக்கு ஏற்றிப் பூஜை செய்ய வேண்டும்.
இறைவனின் திரு உருவச் சிலை அல்லது படத்துக்கு உரிய ஆடை, சந்தனம், நறுமண மலர் முதலியவற்றை அணிவிக்க வேண்டும். மலர் மாலைகளால் அலங்கரிக்க வேண்டும்.
சாம்பிராணி தூபம் அல்லது நறுமண ஊதுபத்தி ஏற்றி வைக்க வேண்டும்.
இறைவனுக்கு நைவேத்தியமாக வெல்ல உருண்டை, கற்கண்டு, பொங்கல், திராட்சை, வாழைப்பழம், துளசி இலை (மஹா விஷ்ணுவுக்கு), வில்வ இலை (சிவபெருமானுக்கு) முதலியவற்றுள், அந்தந்தத் தெய்வங்களுக்கு உகந்த பொருட்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பு: கனன்று கொண்டிருக்கும் நெருப்புத்தணல் மீது தூவப்படும் சாம்பிராணி தூள், எழுப்பும் நறுமணம் மிக்க மெல்லிய புகை, அறை முழுவதும் படர்ந்து அற்புதமான ஒரு அனுபவத்தினை தரும்.
பின்னர், இறைவனுக்குரிய வழிபாட்டு மந்திரங்களை அல்லது பக்திப்பாடல்களை மனமுருகப் பாடி வணங்க வேண்டும்.
No comments:
Post a Comment