விளையாட்டு

106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள் அணி!
06.05.2017

பிரிட்ஜ்டவுனில் நடந்து வரும் மேற்கிந்திய தீவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் 106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி மேற்கிந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடைபெற்றது. மேற்கிந்திய தீவு முதல் இன்னிங்சில் 312 ஓட்டங்களும், பாகிஸ்தான் 393 ஓட்டங்களும் எடுத்தன. யாசிர்ஷாவின் அபார பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் தினறியது.

4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 268 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஹோப் 90 ஓட்டங்கள் எடுத்தார். யாசிர் ஷா 6 விக்கெட் வீழ்த்தினார். இந்நிலையில், 187 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 81 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

106 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஷனோன் கேப்ரியல் 5 விக்கெட்களை கைப்பற்றி 11 ஓட்டங்களை வழங்கினார். இவருடன் தலைவர் ஜேசன் ஹோல்டர் மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.இப்போட்டியின் ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸிலும் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்ரியல் தெரிவுசெய்யப்பட்டார்.

மேற்கிந்திய தீவு வெற்றியை தொடர்ந்து இரு அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் சமமாகியுள்ள நிலையில் இறுதி போட்டி மே மாதம் 10-ம் திகதி நடைபெறவுள்ளது.
 
-------------------------------------------------------------------------------------
குஜராத்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கியது பெங்களூர்!
20.04.2017
ஐ.பி.எல் தொடரில் குஜராத் லயன்ஸ் அணியுடனான போட்டியில் ரோயல் சலஞ்சர்ஸ் அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

தொடரின் 20 ஆவது போட்டியாக ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் லயன்ஸ் களத்தடுப்பை தெரிவுசெய்ய ரோயல் சலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

துடுப்பாட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 2 விக்கெட்களை இழந்த பெங்களூர் அணி 213 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அணியின் சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய கெய்ல் 77 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 64 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து 214 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய குஜராத் லயன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொள்ள 21 ஓட்டங்களால் பெங்களூர் அணி வெற்றியை தனதாக்கியது.

குஜராத் லயன்ஸ் அணியின் சார்பில் துடுப்பாட்டத்தில் மக்கலம் அதிகபட்சமாக 72 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். போட்டியின் ஆட்டநாயகனாள கெய்ல் தெரிவானார்.

இந்த போட்டியின் வெற்றிமூலம் 2 புள்ளிகளை பெற்றுக் கொண்ட பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணி ஒட்டுமொத்தமாக 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்திலுள்ளது. குஜராத் லயன்ஸ் அணி 2 புள்ளிகளுடன் எட்டாவது இடத்திலுள்ளது.
 
------------------------------------------------------------------------------------------------------
டென்னிஸ் தரவரிசையில் செரீனா மீண்டும் முதலிடம்!
19.04.2017

புதிய தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்திற்கு முன்னேறுகிறார்.



சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் தற்போது முதலிடம் வகிக்கிறார்.

இந்த நிலையில் வருகிற 24-ம் திகதி வெளியாகும் புதிய தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்க ஜாம்பவான் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்திற்கு முன்னேறுகிறார்.

தரவரிசை கணக்கீட்டில் கடந்த ஆண்டு ஜெர்மனியின் ஸ்டட்ஹர்ட் நகரில் நடந்த போர்சே டென்னிஸ் போட்டியின் முடிவு நீக்கப்படுவதன் மூலம் செரீனாவுக்கு மீண்டும் முதலிட ஜாக்பாட் அடித்துள்ளது.

ஏஞ்சலிக் கெர்பர், ஸ்டட்ஹர்ட் டென்னிசில் நடப்பு சம்பியன் ஆவார். இந்த ஆண்டுக்கான ஸ்டட்ஹர்ட் டென்னிஸ் போட்டி 24-ம் திகதி முதல் 30-ம் திகதி வரை நடக்கிறது. இதில் அரைஇறுதிக்கு கெர்பர் முன்னேறினால், மறுபடியும் முதலிடத்தை தட்டிப்பறிக்கலாம். 
-------------------------------------------------------------------------------------------------------------------------
மெஸ்சியின் ஆட்டத்தால் செவிலியாவை 3 – 0 என வீழ்த்தியது பாசிலோனா!

07.04.2017

லா லிகா தொடரில் மெஸ்சி இரண்டு கோல்கள் அடித்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 3-–0 என செவிலியாவை வீழ்த்தியது பாசிலோனா.






லா லிகா தொடரின் லீக் ஆட்டம் ஒன்றில் முன்னணி கிளப் அணிகளான பாசிலோனா- செவியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் தொடக்கத்தில் இருந்தே பர்சிலோன அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 25-வது நிமிடத்தில் சுவாரஸ் அபாரமாக முதல் கோலை அடித்தார். மெஸ்சி கொடுத்த பாஸை, சுவாரஸ் அற்புதமாக பைசைக்கிள் கிக் அடித்து கோலாக்கினார்.


அடுத்த 3-வது நிமிடத்தில் மெஸ்சி ஒரு கோல் அடித்தார். அத்துடன் ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடித்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் பாசிலோனா 3- –0 என முன்னிலைப் பெற்றது.


2-வது பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்ல. இதனால் பாசிலோனா 3- –0 என வெற்றி பெற்றது. நடுவரிடம் தகராறு செய்ததால் இரண்டு கிளப் போட்டிகளில் மெஸ்சி தடை பெற்றிருந்தார். அதன்பின் தற்போது களம் இறங்கிய அவர் இரண்டு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார்.

இந்த பருவகாலத்தில் 41 போட்டிகளில் 40 கோல்கள் அடித்துள்ளார். 
-------------------------------------------------------------------------------------
ஐ.பி.எல். இன்று ஆரம்பம் !
06.04.2017



இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் தொடர் இன்று (05) ஆரம்பமாகிறது. 10 ஆவது முறையாக இடம்பெறும் ஐபிஎல் தொடரில் மொத்தமாக 60 போட்டிகள் இடம்பெறவுள்ளதோடு, தொடரின் முதல் சுற்றில் 14 போட்டிகள் இடம்பெறும். இன்று (05) இரவு 8.00 மணிக்கு இடம்பெறும் முதல் போட்டியில், கடந்த தொடரில் வெற்றி.

-----------------------------------------------------------------------------------------------


குசல் பெரேராவின் அபார ஆட்டத்தால் இலங்கை 6 விக்கெட்டுகளால் வெற்றி
04.04.2017

பங்களாதேஷுக்கு எதிரான முதலாவது 20க்கு 20 ஆட்டத்தில் குசல் ஜனித் பெரேராவின் அபார ஆட்டத்தின் உதவியுடன் இலங்கை அணி ஆறு விக்கெட்டால் அபார வெற்றி பெற்றது.
156 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என பதிலெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக குசல் பெரேரா -அணியின் தலைவர் உப்புல் தரங்க ஜோடி களமிங்கி முதலாவது விக்கெட்டுக்காக 65 ஓட்டங்கள் குவித்த வேளை அணியின் தலைவர் தரங்க 24 ஓட்டங்களுக்கு ஆட்டமிந்தார். பின்னர் பெரோவுடன் இணைந்தார் டில்சான் முணவீர இருவரும் ஆடுவார்கள் என்ற நிலையில் முணவீர 8 ஓட்டங்கள் பெற்ற வேளை மோர்தஷா வீசிய பந்தில் அவரிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் பெரேராவுடன் இணைந்தார் அசேல குணரத்தின. இருவரும் இலங்கை அணிக்கு நம்பிக்கை தரும் விதத்தில் ஆடிய வேளை குணரத்தின 17 ஓட்டங்கள் பெற்றிரிந்த வேளை ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார்.அப்போது இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 120 ஆகும்.குசல் பெரேராவுடன் இணைந்தார் சீகுகே பிரசன்ன.

இலங்கை அணிக்காக சிறப்பாகவும் அதிரடியாவும் ஆடிய குசல் பெரேரா 53 பந்துகளை எதிர்கொண்டு 9 நான்கு ஓட்டங்கள் மற்றும் ஒரு ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 77 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார்.பின்னர் பிரசன்னவுடன் இணைந்தார் திஸர பெரேரா .இருவரும் நிதானமதாக ஆடி 18.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களை பெற்று 6 விக்கெட்டால் வெற்றி பெற்றது. பிரசன்ன 22 ஓட்டங்களையும் பெரேரா 4 ஓட்டங்களையும் பெற்றனர்.

பங்களாதேஷ் அணி சார்பாக பந்து வீச்சில் மோர்தஷா இரண்டு விக்கெட்டையும் தஸ்கின் அஹமட் ஒரு விக்கெட்டையும் பதம் பார்த்தனர்.
இலங்கை மற்றும் சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதலாவது 20க்கு 20 போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணியின் தலைவர் தனது அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அறிவித்தார் அதற்கு அமைய திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி 45 நிமிடங்கள் தாமதித்தே ஆரம்பமானது.கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று ஆரம்பமானது.

பின்னர் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கவின் இரண்டாவது பந்தில் போல்ட் முறையில் தமீம் இக்பால் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்து சென்றார்.பின்னர் சுமையா சர்காருடன் இணைந்தார் சபீர் ரஹ்மான் இருவரும் இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்காக 29 பந்துகளை எதிர்கொண்டு 57 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை சபீர் ரஹ்மான் 16 ஓட்டங்களுக்கு ரன் அவுட் முறையில் ஆட்ட்மிழந்தார்.

பின்னர் சர்காருடன் இணைந்தார் விக்கெட் காப்பாளர் முக்ஷ்பிகுர் ரஹீம்.பங்களாதேஷ் அணிக்கு சிறந்த முறையில் ஓட்டம் பெற்றுக்கொடுத்த சர்கார் 20 பந்துகளை எதிர்கொண்டு 3 நான்கு ஓட்டம் ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 29 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளை விகும் சஞ்சயவின் பந்தில் திஸர பெரேராவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.அப்போது அவ்வணி 3 விக்கெட் இழப்புக்கு 57 ஓட்டங்களை பெற்றிருந்தது.அவ்வணியின் மூத்த வீரர் சஹீப் அல் ஹசன் ரஹீமுடன் களமிறங்கினார்.ரஹீம் 8 ஓட்டங்களை பெற்ற வேளை ஆட்டமிழந்தார். பின்னர் சகல துறை வீரர் மொஷ்தாக் ஹொசையின் களமிறங்கினார்.

 இருவரும் சிறப்பாக ஆடிய போது 11 ஓட்டங்கள் பெற்றிருந்த ஹசன் ஆட்டமிழந்து சென்றார்.ஹொசையின் மற்றும் மஹ்மூதுல்லா ஜோடி சிறப்பாக ஆடி அவ்வணிக்கு ஓட்டங்களை குவித்தனர்.மஹ்மூதுல்லா 31 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.ஹொசையின் 34 ஓட்டங்களுடனும் அணியின் தலைவர் மோர்த்தஷா 9 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருக்க பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.பந்து வீச்சில் இலங்கை அணி சார்பாக மாலிங்க இரண்டு விக்கெட்டையும் சஞ்சய ,குணரத்தன மற்றும் பிரசன்ன தலா ஒரு விக்கெட்டை பதம் பார்த்தனர்.

இந்த ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக முஹம்மது சையிபுதீன் தனது 20க்கு 20 போட்டி வரத்தை நேற்றய ஆட்டத்தில் பெற்றுக்கொண்டார்.
ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இலங்கை அணி 12 இருபதுக்கு-20 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 10 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக குசல் பெரேரா தெரிவானார்.
------------------------------------------------------------------------------------------------------
இறுதியாட்டத்தில் வென்று தொடரை சமன் செய்யுமா இலங்கை அணி !


01.04.2017                                                                                                                                                  


























இலங்கை-பங்களாதேஷ் அணிகள் மோதும் இறுதி ஒரு நாள் அட்டம் இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் காலை 10 மணிக்கு ஆரம்பமாகிறது. எஸ்.எஸ்.சி மைதானத்தில் கடந்த 6 வருடங்களுக்கு பிறகு ஒரு நாள் ஆட்டம் இடம்பெறுவது விசேட அம்சமாகும். மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான போட்டியே கடைசியாக இடம்பெற்ற போட்டியாகும்.

அதில் இலங்கை அணி 26 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.இதில் இலங்கை அணி முதலில் துடுப்பாடி 277 ஓட்டங்களை குவித்தது.பதிலுக்கு ஆடிய மேற்கிந்திய அணி 251 ஓட்டங்களை பெற்றிருந்தது. இலங்கை அணி பங்களாதேஷ் அணியுடனான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் 300 ஓட்டங்களுக்கு மேல் பெற வேண்டும்.


இரு அணிகளும் ஆடிய முதல் ஆட்டம் தம்புள்ள மைதானத்தில் இடம்பெற்றது. இதில் பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. இரண்டவாது ஆட்டம் மழை குறுக்கிட்டதால் கைவிடப்பட்டது. அதனால் பங்களாதேஷ் அணி தொடரில் முன்னிலை வகிக்கின்றது.


இலங்கை அணி வெற்றி பெறவேண்டுமானால் முன்னணி மற்றும் மத்திய வரிசை, இறுதி வரிசை வீரர்கள் சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடினால் மாத்திரம் பங்களாதேஷ் அணி க்கு சவால் விடும் வண்ணம் ஆட முடியும் அதுமட்டுமல்ல தொடரை சமப்படுத்த முடியும்.


இலங்கை அணியின் அசேல மற்றும் சிறிவர்தன ஆகியோர் நிலைத்து நின்று ஆடி பங்களாதேஷ் அணிக்கு வெற்றி வாய்ப்பை பறிக்க வேண்டும்.அத்துடன் இலங்கையின் அபிமானத்தை தக்கவைக்கவேண்டும்.
-------------------------------------------------------------------------------------
ஆட்டநிர்ணயம்; பாகிஸ்தான் வீரர்கள் ஐவருக்கு வெளிநாடு செல்ல தடை!
22.03.2017


பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ போட்டியின்போது ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை விதித்து பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் உத்தரவிட்டுள்ளார்.



பாகிஸ்தான் சூப்பர் ‘லீக்‘ (பி.எஸ்.எல்.) கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சூதாட்டத்தில் ஈடுபட்ட அந்நாட்டைச் சேர்ந்த ‌ஷர்ஜில்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், நாசிர் ஜாம்ஷெட், ஷாசாயிப் ஹசன் ஆகிய 5 வீரர்கள் மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து உள்ளது. அவர்கள் இடைநிறுத்தம் செய்யப்பட்டு உள்ளனர்.



இந்த நிலையில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் சிக்கிய 5 வீரர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளார்.



பாகிஸ்தான் பிரிமீயர் ‘லீக்’ ஸ்பாட்பிக்சிங் சூதாட்டம் தொடர்பாக சர்வதேச புலனாய்வு அமைப்பு (எப்.ஐ.ஏ) விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை குழு கேட்டுக்கொண்டதன் பேரில் 5 வீரர்களும் நாட்டை விட்டு வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.



சூதாட்டத்தில் சிக்கிய முகமது இர்பானும், கலாத் லத்தீப்பும் எப்.ஐ.ஏ.விடம் வாக்குமூலம் கொடுத்து உள்ளனர். வீரர்களின் தொலைபேசி லேப்டாப்களை வழங்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் எப்.ஐ.ஏ கேட்டு உள்ளது. வழக்கு விசாரணைக்காக சாட்சியங்கள் கிடைக்குமா? என்பதற்காக இதை கேட்டுள்ளதாக தெரிகிறது.



இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் சபை ஸ்பாட் பிக்சிங் சூதாட்டம் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நடுவர் மன்ற குழுவை அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற லாகூர் ஐகோர்ட்டு நீதிபதி ஹைதர், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை முன்னாள் தலைவர் தவுகீர் ஜீயா, முன்னாள் டெஸ்ட் தலைவர் ஹசிம் பாரி ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.


இந்த குழு வருகிற 24 ம் திகதி சர்ஜில்கான், காலித் லக்தீப்பிடம் விசாரணை நடத்துகிறது. 


------------------------------------------------------------------------------------------------------------
தொடரைக் கைப்பற்றியது இந்தியா
15.03.2017
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

முதலிரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டியில் வென்றிருந்த நிலையில், பெங்களூரில், இன்று (01) இடம்பெற்ற தீர்க்கமான மூன்றாவது போட்டியில், 75 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இந்திய அணி, 2-1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணியின் தலைவர் ஒயின் மோர்கன், இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடப் பணித்தார். இந்திய அணி சார்பாக, றிஷாப் பண்ட் அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய அணியின் தலைவர் விராத் கோலி, அணியின் ஓட்ட எண்ணிக்கை நான்கு ஆக இருக்கும்போதே ஆட்டமிழந்தபோதும், இந்திய அணியின் இரண்டாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த லோகேஷ் ராகுலும் சுரேஷ் ரெய்னாவும் 61 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், மூன்றாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த ரெய்னாவும் மகேந்திர சிங் டோணியும் 55 ஓட்டங்களைப் பகிர்ந்ததுடன், நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த டோணியும் யுவ்ராஜ் சிங்கும் 57 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தனர். இந்திய அணியின் இனிங்ஸின் 18ஆவது ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசியிருந்த நிலையில், மூன்று, 6 ஓட்டங்கள், ஒரு 4 ஓட்டங்கள் உள்ளடங்கலாக, 23 ஓட்டங்களை அந்த ஓவரில் யுவ்ராஜ் சிங் பெற்றிருந்தார்.

துடுப்பாட்டத்தில், இந்திய அணி சார்பாக, சுரேஷ் ரெய்னா 63(45), மகேந்திர சிங் டோணி 56(36), யுவ்ராஜ் சிங் 27(10), லோகேஷ் ராகுல் 22(18) ஓட்டங்களைப் பெற்றனர். இதில், தனது 76ஆவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியில் விளையாடிய டோணி, இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில் தனது முதலாவது அரைச்சதத்தைப் பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில், இங்கிலாந்து அணி சார்பாக, தைமல் மில்ஸ், பென் ஸ்டோக்ஸ், லியாம் பிளங்கெட், கிறிஸ் ஜோர்டான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

பதிலுக்கு, 203 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்குடன் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, 16.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 127 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுத் தோல்வியடைந்தது.

இங்கிலாந்து அணியின் இரண்டாவது விக்கெட்டுக்காகவும், மூன்றாவது விக்கெட்டுக்காகவும், முறையே 47, 64 ஓட்டங்களைப் பகிரப்பட்டபோதும், இறுதி எட்டு விக்கெட்டுக்களையும் எட்டு ஓட்டங்களுக்கு, 18 பந்துகளில் இழந்திருந்தது.

துடுப்பாட்டத்தில், இங்கிலாந்து அணி சார்பாக, ஜோ றூட் 42(37), ஒயின் மோர்கன் 40(21), ஜேசன் றோய் 32(23) ஓட்டங்களைப் பெற்றனர்.

பந்துவீச்சில், இந்திய அணி சார்பாக, யுஸ்வேந்திர சஹால், நான்கு ஓவர்களில், 25 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளில், மூன்றாவது சிறந்த பந்துவீச்சுப் பெறுதி இதுவாகும். சஹால் தவிர, ஜஸ்பிரிட் பும்ரா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, அமித் மிஷ்ரா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.

போட்டியின் நாயகனாகவும் தொடரின் நாயகனாகவும் சஹால் தெரிவானார்.

அந்தவகையில், டெஸ்ட் தொடரில், 4-0 என்ற ரீதியில் தோற்ற இங்கிலாந்து, ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், 2-1 என்ற ரீதியில் தோற்று, தற்போது இருபதுக்கு-20 சர்வதேச போட்டித் தொடரிலும் தோற்று, எல்லா வகையான தொடரிலும் தோற்று வெற்றுக்கையுடன் இந்தியாவை விட்டு இங்கிலாந்து செல்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
















தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லை!
14.03.2017

தற்போதைய கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைவதற்கு தாம் தயாரில்லையென முன்னாள் இலங்கைக் கிரிக்கெட் அணித் தலைவரும் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கிரிக்கெட் நிர்வாகத்தில் இணைந்துகொள்ள வேண்டுமென இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் முகாமையாளர் அசங்க குருசிங்க முன்வைத்த கோரிக்கைக்கு முதன் முறையாக பதிலளிக்கையிலேயே அமைச்சர் இக்கருத்தினை வெளியிட்டார்.

உடுகம்பலவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிடுவதன் காரணமாக அசங்க குருசிங்கவினால் தன்னுடைய கடமைகளை உரியமுறையில் நிறைவேற்றுவதற்கு சந்தர்ப்பம்கிட்டாதென தெரிவித்தார்.

'கடந்த 20 ஆண்டுகளாக இந்நாட்டில் என்ன நடந்ததென அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை. எவ்வாறான அரசியல் தலையீடுகள் முன்னெடுக்கப்பட்டன. எவ்வாறான திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன. எவ்வாறான தவறிழைத்த நபர்கள் விளையாட்டில் ஈடுபட்டார்கள் என அசங்க குருசிங்க அறிந்திருக்கவில்லை.

தற்போதைய கிரிக்கெட் நிர்வாகிகள் தன்னுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு, குருசிங்கவிற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். நிர்வாகத்தில் உள்ளவர்கள் அரசியல் தலையீடுகளை மேற்கொள்கின்றார்கள். அவர்களுடைய நண்பர்களின் பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குகின்றார்கள். அண்மையிலும் இவ்வாறானதோர் சம்பவம் பதிவாகியது.

இந்நடவடிக்கை காரணமாக கிரிக்கெட் நிர்வாகத்திற்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தற் பொழுது முன்னாள் கிரிக்கெட் வீரர்களை பயன்படுத்தி தங்களுடைய சேறுகளை மறைக்க முயற்சிக்கும் செயன்முறையொன்று பின்பற்றப்படுகின்றது.

எனவே நான் மிகவும் பொறுப்புணர்வுடன் கூறவிரும்புவது யாதெனில், முன்னாள் வீரர்களான அரவிந்த, அசங்க, சனத் ஆகிய அனைவரும் கிரிக்கெட் விளையாட்டில் தவறொன்று இழைக்கப்படுமாயின் அத்தவறை சரிசெய்ய வேண்டும். இல்லையேல் அதிலிருந்து விலக வேண்டுமென்பதையே நான் விசேடமாக குறிப்பிடுகின்றேன். உலகக் கிண்ணத்தை வென்ற பலர் இன்று கிரிக்கெட் பயிற்சியாளர்களாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். எனவே எதிர் காலத்தில் எம்மாலும் உலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளலாம். அதன் பொருட்டே இவ்வீரர்கள் வரவழைக்கப்படுகின்றார்கள். இவ்வீரர்களுக் குரிய சந்தர்ப்பங்களை வழங்கி வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டுமென அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார். 
------------------------------------------------------------------------------------------------------
இன்னும் 390 ஓட்டங்கள் பின்னிலையில் பங்களாதேஷ்


















457 எனும் வெற்றி இலக்கை நோக்கி, தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, இன்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஷ் 67/0
செளமியார் சர்கார் 53*
தமீம் இக்பால் 13*
அதன் அடிப்படையில் இன்னும் 390 ஓட்டங்கள் பின்னிலையில், பங்களாதேஷ் அணி உள்ளது என்பதோடு, நாளை (11) போட்டியின் இறுதி நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் அணிக்கு வெற்றி இலக்கு 457
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் அணிக்கு 457 ஓட்டங்கள் வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனது இரண்டாவது இன்னிங்ஸை 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில் இடைநிறுத்திய இலங்கை அணி, பங்களாதேஷ் அணிக்கு 457 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இலங்கை அணி 494/10
குசல் மெண்டிஸ் 194
அசேல குணரத்ன 85
நிரோஷன் திக்வெல்ல 75
மெஹ்தி ஹசன் மிராஸ் 4/113
பங்களாதேஷ் 312/10
முஸ்பிகுர் ரஹீம் 85
செளமியா சர்கார் 71
தமீம் இக்பால் 57
குசல் பெரேரா 3/53
ரங்கன ஹேரத் 3/72
இலங்கை அணி 274/6
உபுல் தரங்க 115
தினேஷ் சந்திமால் 50
மெஹ்தி ஹசன் மிராஸ் 2/77
சகிப் அல் ஹசன் 2/104




















------------------------------------------------------------------------------------
மழை குறுக்கீடு; இலங்கை 182 ஓட்டங்கள் முன்னிலை
09.03.2017
பங்களாதேஷ் இலங்கை அணிகளுக்கு இடையில் காலியில் இடம்பெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டி மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு, இன்றைய நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
காலியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக போட்டி இவ்வாறு இடைநிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
போட்டியின் மூன்றாவது நாளான இன்று (09) இரண்டு விக்கெட்டுகளை இழந்து 133 ஓட்டங்களுடன் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி, சகல விக்கட்டுக்களையும் இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.
முஷ்பிகுர் ரஹீம் 85
செளம்யா சர்கார் 71 
தில்ருவன் பெரேரா 3/53
ரங்கன ஹேரத் 3/72
போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்சிற்காக சகல விக்கட்டுக்களையும் இழந்து 494 ஓட்டங்களை பெற்றது.
குசல் மெண்டிஸ் 194 
அசேல குணரத்ன 85
மெஹ்தி ஹசன் மிராஸ் 4/113
இலங்கை அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பிக்கவிருந்த நிலையில், மழை காரணமாக போட்டி, இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாளை (10) போட்டியின் நான்காவது நாளாகும்.
---------------------------------------------------------------------------------------------------------------------


முதல் நாள் முடிவில் இலங்கை அணி 321/4

07.03.2017




இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில்  இன்று (07) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதலாவது நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து, 321 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 



காலியில் இடம்பெற்று வரும் குறித்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.


ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய உபுல் தரங்க 4 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போதிலும், அதனைத் தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த குசல் மெண்டிஸ் இன்றைய நாள் முழுவதும், ஆடுகளத்தில் நின்று ஆட்டமிழக்காது 166 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் இலங்கை அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.


குசல் மெண்டிஸ் -166

அசேல குணரத்ன -85

திமுத் கருணாரத்ன- 30




பங்களாதேஷ் அணி சார்பில், முஸ்தபிசுர் ரஹ்மான், தஸ்கின் அஹமட், சுபாசிஸ் ரோய், மெஹ்தி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

போட்டியின் முதலாம் நாள் நிறைவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து, 321 ஓட்டங்களை பெற்றது. நாளை போட்டியின் இரண்டாம் நாளாகும்.

--------------------------------------------------------------------------------------------------------------------
அஸ்வினின் 6 விக்கெட்டுகளுடன் ஆஸியை வென்று தொடரை சமன் செய்த இந்தியா

07.03.2017




இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பெங்களூரில் நடைபெற்றுவந்த 2-வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் ஆஸிக்கு எதிரான தொடரை இந்தியா சமன் செய்தது.



இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி, அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.



188 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, பொறுமையாகவே தனது ஆட்டத்தை தொடங்கியது.

4 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்ததும், 5வது ஓவரில் ரென்ஷா, இஷாந்த் சர்மாவின் வேகத்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 17 ஓட்டங்கள் எடுத்த வோர்னர் அஸ்வினின் சுழலுக்கு வீழ்ந்தார்.



ஷோன் மார்ஷ் 9 ஓட்டங்கள், ஸ்மித் 28 ஓட்டங்கள், மிட்சல் மார்ஷ் 13 ஓட்டங்கள் என தொடர்ந்து வந்த ஆஸி. வீரர்கள் சொற்ப ஓட்டங்கள் குவித்து, சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். ஒரு பக்கம் ஆஸி.வீரர் ஹான்ட்ஸ் காம்ப் மட்டும் தாக்குப்பிடித்துக் கொண்டிருக்க மறு முனையில் ஆஸி. வீரர்கள் வந்த வேகத்தில் வீழ்ந்து கொண்டிருந்தனர்.

முடிவில் ஆஸி. அணி 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைக் கண்டது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனாகியுள்ளது.



அஸ்வினின் சாதனை



ரவிச்சந்திரன் அஸ்வின் 12.4 ஓவர்கள் வீசி, 41 ஓட்டங்கள் விட்டுத்தந்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் ஒரு இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது 25-வது முறையாகும். மேலும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்கள் பட்டியலில், பிஷன் சிங் பேடியை முந்தி 5வது இடத்தையும் அஸ்வின் பெற்றுள்ளார். 
---------------------------------------------------------------------------------------------------------------
நான்கு அணிகள் இன்று பலப்பரீட்சை03.03.2017


டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் சுப்பர் 8 சுற்றின் 7ஆவதும் இறுதியுமான வாரத்திற்கான பரபரப்பான போட்டிகள் இடம்பெறவுள்ள அதன்படி முக்கிய நான்கு அணிகள் மோதிக்கொள்ளும் தீர்மானம் மிக்க இரண்டு போட்டிகள் இன்று இடம்பெறுகின்றன.



தொடரின், இறுதி நாள் போட்டி முடிவுகள் மூலம் சம்பியனாகும் வாய்ப்பினை யார் பெறுவார்கள் என்பதினை பொறுத்திருந்து பார்ப்போம்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
கிரிக்கெட்டை மேம்படுத்த வேண்டும்-சனத் ஜயசூரிய


கிழக்கு மாகாணத்தில் விளையாட்டு மைதானங்களைப் புனரமைத்து கிரிக்கெட் விளையாட்டினை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போவதாக, இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சனத் ஜயசூரிய தெரிவித்தார்.

மட்டக்களப்பு சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25வது ஆண்டு நிறைவினையொட்டிய நிகழ்வு, கடந்த வெள்ளிக்கிழமை (20) மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்புக்கு விஜயம் செய்த சனத் ஜெயசூரியவுக்கு, மெதடிஸ்த மத்திய கல்லூரியில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது, பாடசாலைக்குச் சென்று பாடசாலையில் மேற்கொள்ளப்படும் விளையாட்டு செயற்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

அதனைத்தொடர்ந்து மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25ஆவது ஆண்டுநிறைவு விழா நடைபெற்றது.
சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் வை.கோபிநாத் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை கிரிக்கெட் தேர்வுக்குழுவின் தலைவரும் முன்னாள் கிரிக்கட் வீரருமான சனத் ஜயசூரிய பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் எம்.உதயகுமார், மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளர் கே.பாஸ்கரன் உட்பட மெதடிஸ்த மத்திய கல்லூரி பாடசாலையின் அதிபர் பி.விமல்ராஜ், பழைய மாணவர்கள், சென்றலைட் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் முதல் பாடசாலையென்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறையின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு சென்றலைட் விளையாட்டுக்கழகம் உருவாக்கப்பட்டது.

இதன்போது சென்றலைட் விளையாட்டுக்கழகத்தின் 25ஆவது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையிலான நினைவு மலரும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

விளையாட்டுத்துறையில் பிரகாசித்துவரும் இளம் வீரர்களுக்கு இதன்போது விருதுகள் வழங்கிக்கௌரவிக்கப்பட்டதுடன், விளையாட்டுத்துறைக்கு அர்ப்பணிப்புகளைச் செய்தவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment