உலகின் மிகப்பெரிய டேட்டா-சயிண்டிஸ்ட் 'கேகுல்' (Kaggle)உடன் கைகோர்த்தது கூகுள்
20.03.2017
உலகின் நம்பர் ஒன் தேடுதளம் என்று கூறப்படும்
சியர்ச் இஞ்சின் நிறுவனமான கூகுள் உலகின் மிகப்பெரிய டேட்டா சயிண்டிஸ்ட் நிறுவனமான கேகுல் உடன் இன்று இணைந்துள்ளதாகவும், இனி இரு நிறுவனங்களும் ஒன்றுபட்டு செயல்பட போவதாகவும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை கூகுள் கிளவுட் நிறுவனத்தின் உயரதிகாரி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் கேகுள் நிறுவனம், இதுவரை 800,000க்கும் மேற்பட்ட டேட்டா மேதாவிகளை கொண்டுள்ளது. டேட்டா அனலிஸ் மற்றும் மிஷின் லேர்னிங் என்று கூறப்படும் மிஷின் செயல்படும் விதம் குறித்த ஆய்வுகளை செய்து வரும் இந்த நிறுவனம் மிக துல்லியமான ரிசல்ட் கொடுக்கும் தன்மை உடையது என்பதால் இந்தரிசல்ட் மூலம் பல நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சியை தக்க வைத்து கொள்கின்றன.கூகுள் நிறுவனத்தின் கூகுள் கிளவுட் உயர் விஞ்ஞானி இதுகுறித்து கூறியபோது, 'கேகுள் நிறுவனத்துடன் கைகோர்த்து செயல்படுவது என்பது மிகச்சிறந்த சேவையை வாடிக்கையாளர்களுக்கும் மக்களுக்கும் கொடுக்க வேண்டியது என்ற ஒரே நோக்கம்தான். இரு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்த இணைப்பு ஒரு மைல்கல்
உலக அளவில் முன்னணி நிறுவனமாக உள்ள கேகுல், டேட்டா சயிண்டிஸ்ட் மற்றும் மெஷின் லேர்ணிங் விசயத்தில் ஜம்பவானாக இருப்பதால் உலகில் உள்ள பல நிறுவனங்களுக்கு ஆலோசனை மற்றும் போட்டியாளர்களை சமாளிக்கும் திறன் ஆகியவைகளுக்கு அட்வைஸ் செய்து வருகிறது.
கூகுளுடன் இணைந்து கேகுல் தனது பணியை தொடரும்போது இன்னும் அதிகப்படியான பயன்களை அதன் வாடிக்கையாளர்கள் மட்டுமன்றி கூகுளின் வாடிக்கையாளர்களும், அவைகளை பயன்படுத்துவோரும் பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இரு நிறுவனங்களின் இணைப்பில் கண்டிப்பாக இண்டர்நெட் உலகிலும், மிஷின் லேர்னிங் துறையிலும் ஒரு புதிய சகாப்தம் படைக்கும் என்பதில் ஜயமில்லை.------------------------------------------------------------------------------------------------
ஆப்பிளுக்கு ஆப்பு, நோக்கியாவிற்கும் ஆப்பு - பிளாக்பெர்ரி அரோரா அறிமுகம்.!
20.03.2017
உலகின் நம்பர் ஒன் தேடுதளம் என்று கூறப்படும்
![]() |

10.03.2017
பழைய பகையாளி மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தை களத்தில் குதித்துள்ளதின் விளைவாய் இரண்டு பக்கமும் நெருக்கடியை ஆப்பிள் நிறுவனம் உணரும்.!
ஏற்கனேவே நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகளின் மறுவருகை காரணத்தினால் கலங்கிப்போய் கிடைக்கும் ஆப்பிள் நிறுவனத்திற்கு இப்போது அதன் பழைய பகையாளி மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தை களத்தில் குதித்துள்ளதின் விளைவாய் இரண்டு பக்கமும் நெருக்கடியை ஆப்பிள் நிறுவனம் உணரும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.இன்னும் சொல்லப்போனால் பிளாக்பெர்ரி அரோரா - நோக்கியா கருவிகளுக்கே சவால் விடும் என்பது போலத்தான் தெரிகிறது.!
பிளாக்பெர்ரி அரோரா - இந்தோனேஷியாவில் இருந்து தயாரிக்கப்பட்டு வெளியாகியுள்ள முதல் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ஆகும் மேலும் இரட்டை சிம் செயல்பாடு கொண்ட முதல் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் என்றும் கூறப்படுகிறது.
ரேம் உடன் பிளாக்பெர்ரி அரோரா கருவியானது 4ஜிபி ரேம் இணைந்து ஒரு 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட்கோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
கேமரா ஒளியியல் அடிப்படையில், பிளாக்பெர்ரி அரோரா ஒரு 13 மெகாபிக்சல் பின்புற மற்றும் செல்பீகளுக்காக ஒரு 8 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.
சேமிப்பு மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக சேமிப்பு நீட்டிப்பு ஆதரவு கொண்ட இயக்கருவி 32ஜிபி அளவிலான உள்ளடங்கிய சேமிப்பு கொண்டுள்ளது (அதிகபட்ச கொள்ளளவு குறிப்பிடப்படவில்லை).
பேட்டரித்திறன் இணைப்பு விருப்பங்கள் அடிப்படையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், ப்ளூடூத் 4.0, மற்றும் வைஃபை ஆகிய ஆதரவுகளை வழங்குகிறது. 3000எம்ஏஎச் என்ற மெகா பேட்டரித்திறன் கொண்ட இக்கருவி அளவீட்டில் 152x76.8x8.5மிமீ மற்றும் 178 கிராம் எடையுடையது.
விலை நிர்ணயம் இதன் உலக வெளியீடு மற்றும் இந்திய வெளியீடு பற்றிய அறிவிப்புகள் எதுமில்லை என்கிற போதிலும் ரூ.17,400/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தோனேஷியாவில் ஏற்கனவே கடந்த மார்ச் 3-ஆம் தேதி முதல் முன்பதிவிற்கு திறந்துவிடப்பட்டு மார்ச் 12 வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கருப்பு, வெள்ளி, மற்றும் தங்க நிற வகைகளில் கிடைக்கும்.
-----------------------------------------------------------------------------------------
வீட்டில் வை-பை கனெக்ஷன் மக்கர் பண்ணுதா..?! சரி செய்ய எளிமையான டிப்ஸ்.!
09.03.2017
நம் பொறுமையை மிகவும் சோதித்து பார்க்கும் அத்தியாவசியனமான விடயங்களில் ஒன்று தான் - மெதுவான இன்டர்நெட்..!
அதுவும் வீட்டில் இருக்கும் வை-பை கனெக்ஷனில் 'தொல்லை-சிக்கல்' என்றால் சொல்லவே வேண்டாம் - காதில் இருந்து புகை வராத குறையாக கோபம் வரும். இனி வை-பை தொல்லையால் உங்களுக்கு கோபமும் வராது, காதில் இருந்து புகையும் வராது - எப்படி என்று கேட்கிறீர்களா...?சிறப்பான முறையில் வை-பை கனெக்ஷன் பெற்றிட சில சூப்பர் டிப்ஸ்களை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம். அவைகளை தெரிந்து கொள்ளுங்கள், கூலாக வை-பையை பயன்படுத்துங்க
#01
ரவுட்டர் ஆன்டனாக்கள் மேல்நோக்கி தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சற்று மாற்றியும் வைக்கலாம். தரைமட்டத்தில் ரவுட்டரை வைக்கவே கூடாது. சற்று உயரமாக வைக்க வேண்டும். முடிந்தவரை வீட்டின் நடுவே ரவுட்டரை வைத்தால் நல்லது.

#02
ரவுட்டரை வீட்டின் நடுவே தான் வைக்க வேண்டும் என்ற சட்டமில்லை, நீங்கள் அதிகம் எந்த அறையில் இன்டர்நெட்டை பயன் படுத்துவீர்களோ அங்கும் வைக்கலாம். பிற எலெகட்ரானிக் பொருட்களை ரவுட்டர் அருகே வைப்பதை தவிர்த்திடுங்கள்.
#03
ரவுட்டரை உங்கள் வீட்டு பொருட்கள் எதுவும் மூடி மறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். அடிக்கடி உங்கள் வை-பை சிக்னல் எப்படி இருக்கிறது என்பதை காண்காணிக்க வேண்டும்.
#04
ரவுட்டர் தரமானதாக இருந்தால் மட்டும் போதாது, தரமான இன்டர்நெட் சேவை வழங்குநர் மையமும் வேண்டும். உங்கள் வை-பையை வேறு யாராவது திருட்டுத்தனமாக பயன்படுத்தாமல் பார்த்துக்கொள்ளுங்கள் (அடிக்கடி பாஸ்வேர்ட் மாற்றலாம்).
#05
அவ்வப்போது உங்கள் ரவுட்டரை 'ரீபூட்' செய்ய தவறாதீர்கள். வை-பை கனெக்விட்டியை அதிகரிக்கும் சாப்ட்வேர்களும் சில உண்டு, அவைகளை பயன்படுத்தலாம்.
#06
மிகவும் முக்கிய வேலைகளில் ஈடுபடும் போது செக்கன்டரி ரவுட்டர் ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம். ரவுட்டர்களுக்கு புதிய ஆன்டனாக்களை பொருத்தலாம்.
#07
எல்லாமே சரியாக இருக்கும் போதும் கூட இன்டர்நெட் சரியாக கிடக்கவில்லை என்றால் உங்கள் ரவுட்டரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
----------------------------------------------------------------------------------------------------------------
Huawei GR5 2017 இலங்கையில் அறிமுகம்
Huawei GR5 2017 இலங்கையில் அறிமுகம்
02.03.2017
தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட, இடை வகுப்பு சாதனம் முதலில் இலங்கையில் அறிமுகமாகியுள்ளது. இலங்கையில் மிக விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei மற்றும் சிங்கர் ஸ்ரீலங்கா ஆகியன ஒன்றிணைந்து, கொழும்பில் சிங்கர் Lifestyle Festival கண்காட்சியில் வைபவரீதியாக அறிமுகம் செய்யப்பட்டது.
----------------------------------------------------------------------------------------------------------------------
புத்துயிர் பெற்றது ‘நோக்கியா 3310’02.03.2017
சுமார் 17 ஆண்டுகளுக்கு முன் அறிமுகமான நோக்கியா 3310 கையடக்க தொலைபேசி மறு அறிமுகம் செய்ய செய்யப்பட்டுள்ளது.
இதன் அசல் கையடக்க தொலைபேசி அதிக பிரபலம் கொண்டதாகவும் நீண்ட ஆயுள் கொண்டதாகவும் இருந்தது. 2005 ஆம் ஆண்டு நோக்கியா 3310 முற்றாக காணாமல்போகும்வரை 126 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் உற்பத்தி செய்யப்பட்டன.
பார்சிலோனாவில் ஆரம்பமாகும் உலக கையடக்க தொலைபேசி மாநாட்டை ஒட்டியே இந்த அறிமுகம் இடம்பெற்றுள்ளது. இந்த மாநாட்டில் எல்.ஜி, ஹுவாய் மற்றும் லெனோவோ நிறுவனங்களும் தனது புதிய சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளன. நோக்கியா நிறுவனம் தற்போது கையடக்க தொலைபேசிகளை உற்பத்தி செய்வதில்லை என்பதோடு தொலைத் தொடர்பு சாதனங்கள் மற்றும் மின்னணுசார் உற்பத்திகளை மேற்கொள்கிறது.
நோக்கியா வர்த்தக குறியை பெற்றிருக்கும் எச்.எம்.டி கிளோபல் நிறுவனமே நோக்கியா 3310 மீள் அறிமுகத்தை செய்துள்ளது.
இந்நிலையில் புதிய 3310 கையடக்க தொலைபேசி ஒரு ஸ்மார்ட்போன் அடிப்படையை கொண்டிராமல் மட்டுப்படுத்தப்பட்ட இணைய வசதிகளுடன் தனிச்சிறப்பு தொலைபேசியாகவே அறிமுகமாகியுள்ளது. எனினும் சக்திவாய்ந்த கைபேசி மற்றும் நீண்டு உழைக்கக்கூடிய பெட்டரியை கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த தொலைபேசியின் தொடக்க விலையாக 41 யூரோக்கள் (7800 ரூபாய்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உலகில் அதிகம் விற்பனையான கையடக்க தொலைபேசிகளில் ஒன்றாக பிரபலம் பெற்ற நோக்கிய 3310, கிட்டத்தட்ட அழிக்கவே முடியாதது என்று பெயர்பெற்றதாகும்.
யூ டியூப்பின் நேரலை தொலைக்காட்சி கட்டண சேவை
01.03.2017
அமெரிக்காவில் உள்ள கேபிள் சேனல் ஒளிபரப்புத் தொகுப்புக்கு சவால்விடும் வகையில் மாதம் 35 டாலர் என்ற கட்டணத்தில் தொலைக்காட்சி சேவையை யூ டியூப் நிறுவனம் வழங்க உள்ளது.
இந்த நேரலை தொலைக்காட்சியில் 40க்கும் மேற்பட்ட சேனல்கள் இடம்பெற்றிருக்கும். ஏ பி சி, சி பி எஸ், ஃபாக்ஸ், என் பி சி மற்றும் இ எஸ் பி என் போன்ற நாட்டின் பெரிய சேனல்களும் இதில் அடங்கும்.
இந்த சேவையில் கிளவுட் டிவிஆர் என்ற அம்சமும் அடங்குகிறது. இதன் மூலம், பயன்பாட்டாளர்கள் நிகழ்ச்சிகளை பதிவு செய்து சேகரித்து வைக்கவும் முடியும்.
பாரம்பரிய கேபிள் நிறுவனங்களுக்கு யூ டியூப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக வல்லுநர் ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment