Friday, October 4, 2024

துயர்பகிர்வு!

திரு. நடேசபிள்ளை கனகரட்ணம்((காடி) 
சோளங்கன்
கரணவாய் மேற்கு 
கரவெட்டி


கரணவாய் மேற்கு கரவெட்டியைச் சேர்ந்த திரு.கனகரட்ணம் அவர்கள் இன்று சனிக்கிழமை (05.09.2024) அன்று அவரது இல்லத்தில் இயற்கையெய்தினார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் அறியத்தருகின்றோம். 

அன்னார் காலம் சென்ற நடேசபிள்ளை செல்லம்மா (செல்லாச்சி) அவர்களின் அன்பு புதல்வரும், அமரர்களான திரு.திருமதி. நாகமுத்து அவர்களின் மருமகனும், காலம் சென்ற வள்ளியம்மா (வள்ளியாச்சி) அவர்களின் ஆருயிர் கணவரும், உமாகாந்தன் (உமா - நோர்வே), பவாஸ்காந்தன் (விந்தன் -சுவிஸ்), புவனலோயினி (மேகனா -சுவிஸ்), ஜெயகாந்தன் (நந்தன் லண்டன்), கஜந்தினி (காஞ்சனா - கனடா), தர்சினி, மீனா, அம்பிகா அவர்களின் பாசமிகு தந்தையும், கன்னிகா, நகுலம், அமரர்.விஜயகுமார், பிருந்தா, ஜெயராசா, கேதீசன், திருவாரூரன் ஆகியோரின் மாமாவும், ஹரினி, பிரவீன், ரதுல், பவுசியா, தருஸ், சவிதா, விஜிதா, தமிழ்ஓவியன், யாழ்நிலா, காயத்திரி மதுஷன், சஞ்சய், அபிசன், யதுசன், சுகாசன், அவந்திகா, ஆதீசன் ஆகியோரின் பேரனும், காலம் சென்ற தவமணி, பரமேஸ்வரி மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார். 

அன்னாரின் இறுதி கிரிகைகள் இன்று சனிக்கிழமை (05.09.2024) சோளங்கனில் உள்ள அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று தகன கிரிகைக்காக பூவரசன்திட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார். உறவினர், நண்பர்கள் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர். 
தகவல்: உறவுகள்

No comments:

Post a Comment