Friday, October 11, 2024

கரணவாய் மகா வித்தியாலயத்தின் பரிசில் தினம்-2024!

கரணவாய் மகா வித்தியாலயத்தின்  பரிசில் தினம் 16.10.2024 (புதன்கிழமை)  பாடசாலை முன்றலில் இடம்பெறவுள்ளது.  பாடசாலை தலைமை ஆசிரியர் திரு. சிவபாதம் சிவகணேசன் தலைமையில் இடம்பெறவுள்ள நிகழ்வில்,   பிரதம விருந்தினராக  பாடசாலையின்  பழைய மாணவியும்- கரணவாய் மகாவித்தியாலயம் (B.SC Hons in Engineering Minclox Techno PVT Ltd) நிறுவனத்தின்  பொறியியலாளருமான  செல்வி. சாளினி  விஜயராசா,  சிறப்பு  விருந்தினராக  ஓய்வுநிலை  அதிபர் திரு.சித்திரவேலு  குருகுலசிங்கம்  ஆகியோர் கலந்து கொள்வதுடன்,  க.பொ.த (சா/த)  சித்தியடைந்த  மாணவர்கள்  கௌரவிக்கபடவுள்ளனர்.  பரீட்சையில்  சித்தியடைந்த  மாணவர்களுக்கு  பைசிக்கிள், கற்றல் உபகரணங்கள்  போன்ற   பரிசில்களும் வழங்கி  கெளரவிப்பு செய்யப்படவுள்ளனர். இதற்கான  அனுசரணையை  புலம்பெயர் தேசங்களில்  வசிக்கும்  பழைய மாணவர்கள்  what’s app குழுமம் ஒன்றை  உருவாக்கி  அதன் ஊடாக பழைய மாணவர்களை அணிதிரட்டி  மாணவர்களின்  கல்விக்கு ஊக்கமளித்து வருகின்றனர். கடந்த  3 ஆண்டுகளாக  இவ்வாறாக  புலம்பெயர் பழைய மாணவர்கள்  பாடசாலையின் வளர்ச்சிக்கு  ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து வருகின்றனர்.  இதுவரை  இணைந்து கொள்ளாத  பழைய மாணவர்களும்  இணைந்து கொள்வதன்  மூலம்  பாடசாலையின் வளர்ச்சிக்கு  உதவிட முடியும். நடைபெறவுள்ள பரிசளிப்பு நிகழ்வில்  பெற்றோர்கள்,  பழைய மாணவர்கள், ஊரவர்கள் கலந்து கொண்டு  மாணவர்களின்  ஆற்றலை  ஊக்கப்படுத்தி கெளரவிக்குமாறு பாடசாலை சமூகம் வேண்டி நிற்கிறது.

No comments:

Post a Comment