கரவெட்டி, கப்பூது பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற தோட்டக் கிணற்றில் திங்கள்கிழமை வீழ்ந்தவயோதிபர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய வேலுப்பிள்ளைபொன்னையாபிள்ளை என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், நெல்லியடிப்பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்தப் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் சடலம் ஒன்று மிதப்பதாகப்பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த அவர்கள் சடலத்தை மீட்டுவிசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு சென்ற கரவெட்டி திடீர் இறப்பு விசாரணைஅதிகாரி வே.பாஸ்கரன் சடலத்தை பருத்தித் துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூறாய்வுசெய்ய உத்தரவிட்டார்.
கரவெட்டிப் பகுதியில் பாதுகாப்பாற்ற கிணறுகள் பல காணப்படுவதாகவும்அவற்றை காணி உரிமையாளர்கள் பாதுகாப்பு வேலி அமைத்து பாதுகாப்பாக்க வேண்டும் எனவும்திடீர் இறப்பு விசாரணை அதிகாரி தெரிவித்தார்.
No comments:
Post a Comment