Monday, December 5, 2022

நெல்லியடி மாணவி சாதனை!


அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான தேசியமட்ட 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரி மாணவி வி. சங்கீதா வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுள்ளார். அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான  தேசிய மட்ட கடகள தொடர், கொழும்பு  சுகததாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை 18 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் நெல்லியடி மத்திய கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த மாணவி வீ.சங்கீதா 31.92 மீற்றர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டார்.  

No comments:

Post a Comment