பாடசாலைக்கான கணனி கூடம், மடிகணனிகள், பிரதியெடுக்கும் இயந்திரம், பாடசாலை பராமரிப்பாளர், மரம் நடுகை என்பனவற்றுடன் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கும் உந்து சக்தியாக புலம் பெயர் KMV பழைய மாணவர்கள் செயலாற்றி வருகின்றனர்.
கடந்த விஜயதசமி தினத்தில் பாடசாலைக்கான கணனிகள் தேவைகள் என்று முப்பது (30) லட்சம் ரூபாய் பெறுமதியான திட்டங்களை பழைய மாணவர்கள் பலர் ஒருங்கிணைந்து பாடசாலை சமூகத்திடம் கையளித்துள்ளனர்.
கல்வி, கலை, விளையாட்டு என மேலும் பல விடயங்களை முன்னெத்து பாடசாலையை முதன்மை மிகுந்த பாடசாலையாக்கு வதற்காக புலம் பெயர் பழைய மாணவர்கள் செயற்படுவர். எம்மால் முன்னெடுக்கபடும் பாடசாலைக்கான வளர்ச்சி திட்டங்களை திரு.க. கணேசலிங்கம் அவர்கள் முன்னெடுப்பார்.
பாடசாலைக்கான வளர்ச்சி திட்டத்தில் பங்கு கொள்ளாத பழைய மாணவர்கள் இருப்பின் KMV பழை மாணவர் குழுமத்தில் இணைந்து பாடசாலையின் வளர்ச்சியில் பங்கேற்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறுக சிறுக ஒவ்வொருவரும் செய்யும் உதவி எம்பாடசாலையை உயர்வு நிலைக்கு கொண்டு செல்லும். அனைத்து பள்ளி தோழர்களும் ஒருங்கிணைத்து ஒத்துளைக்குமாறும் KMV பழைய மாணவர்கள் ஒருங்கமைப்பு குழு கோரி நிற்கின்றது.
No comments:
Post a Comment