புலம்பெயர்ந்து வாழும் எமது (கரணவாய் மகாவித்தியாலயத்தின்) பழைய மாணவர்கள் முயற்சியால்பாடசாலையின் அவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன. போட்டோ கொப்பி இயந்திரம், கணனி கூட மறுசீரமைப்பு, Laptop’s கணனிகள் என பல லட்சம் ரூபாய் பெறுமதியான திட்டங்கள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன.
பாடசாலைக்கு ஏற்கனவே திரு. மயில்வாகனம் திஸ்ஸவீரசிங்கம் அவர்களால் கணனி வசதிகள் ஏற்படுத்திகொடுக்கப்பட்ட போதும் ஆண்டுகள் பல கடந்ததால் அவை பழுதடைந்து விட்ட நிலையில் புதிய கணனிகளின்தேவை ஏற்பட்டது. இற்றைக்கு 10 ஆண்டுகளிற்கு முன்னர் பாடசாலைக்கான கணனி தேவைகளை உணர்ந்துதனி நபராக அந்த மாணவர் உதவியமையை பழைய மாணவர்களாக நன்றி கொள்கின்றோம்.
புலம்பெயர் பழைய மாணவர்களின் இணைப்பாளராக திரு. க. கணேசலிங்கம் அவர்களே செயற்பட்டுவருகின்றார் அவரது வழிகாட்டலின் பிரகாரமே அனைத்து விடயங்களிற்கும் புலம்பெயர் பழையமாணவர் சமூகம்உதவிகளை நல்கி வருகின்றது. பாடசாலை ஆசிரியர்கள் கோரியிருந்ததன் பிரகாரம் மேற்படி கற்பித்தலுக்கான மூல பொருட்கள் அனைத்தும் கடந்த விஜயதசமி தினத்தில் திரு. கணேசலிங்கம் அவர்களால் பாடசாலைஅதிபர் திரு. சிவகணேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
மேலும் பல விடயங்கள் தேவைகளை பாடசாலை அதிபர் கோரியுள்ளபோதும் அவற்றுக்கான அனுமதியைபாடசாலை சமூகம் இன்னும் பெற்றுதரவில்லை. எதிர்காலங்களில் அனைத்து விடயங்களும் கட்டமைக்கப்பட்டமுறையில் பழைய மாணவர் சங்கம் ஊடாகவே முன்னெடுக்கப்படும் அதன் அனைத்து விடயங்களையும்இணைப்பாளர் கண்காணிப்பார். புலம் பெயர் மாணவர்களாக அனைவரும் ஒருங்கிணைத்து பள்ளியின்வளர்ச்சிக்க உதவியமையை வாழ்த்துகின்றோம்.
No comments:
Post a Comment