"கப்புதூக் காட்டுக் கவின் தலச் சரிதம் செப்புதற் கியை துணை சிந்துரா னைனே "
பகுதி :1
யாழ் குடாநாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளவை வடமறவராட்சியும் தென்மறவராட்சியும் இப்பகுதியில் "மறவன்புலம்" என்னும் இடம் உள்ளதும் நோக்கத்தக்கது. இது இன்று “மறவன் புலோ” ஆகிவிட்டது. வட மறவராட்சி "வடமராட்சியாய் " , தென் மறவராட்சி "தென்மராட்சியாய்” மருவி விட்டது. இவ்விரு ஆட்சிப் பிரிவுகளிலும் பெரும்பாலாகக் குடியேறியவர்கள் மறவர்கள். தென்னிந்தியத் தென் பகுதிக்கரையோர மக்கள் மறவர்கள். அவர்களே பெரும்பான்மையினராய் இப்பகுதிகளில் வந்து குடியேறியதாகக்கருதப்படுகின்றது.
இந்த மறவர்கள் போர்த்தொழிலாளர், அரசர்களின் படைச்சேனா வீரர்கள் . இந்த மறவர்கள் "தேவர்" எனவும்அழைக்கப்பட்டனர். நாங்கள் இலக்கியங்களிற் சந்திக்கின்ற விண்ணுலகத் தேவர்கள் அல்லர் இத்தேவர்கள் , "பெரிய தேவனத்தாய்", "சின்னத் தேவத்தாய்" என்னும் பெயர்கள் இத்தேவர்களை ஞாபகம் ஊட்டுவன.
இமையாணத் தேவன் குறிச்சி, சமரபாகு தேவன் குறிச்சி என்பனவுந் தேவர்களை நினைவுறுத்துவன, இமையான தேவனும், சமரபாகு தேவனும் யாழ்ப்பாணத் தமிழ் அரசர் காலத்திலிருந்த சேனைத் தலைவர்கள். இந்த வடமராட்சிப் பிரிவு இரு தேர்தற் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இதில் ஒன்று உடுப்பிட்டித் தேர்தற்தொகுதி இத் தொகுதியில் உள்ளது கருணைவாய் தெற்கு. கருணீகர் கணக்கர், இந்தக் கணக்கர்கள்தொண்டை மானோடும், அவன் பெயரால் வழங்கப்பட்டு வரும் ஆறு வெட்டி ஆழமாக்கப்பட்ட காலத்தோடும்சம்பந்தப்பட்டவர்கள்.
இந்தக் கருணைவாய் தெற்கைத் தென் கருணையூர் எனவும் அழைப்பர். இந்தத் தென் கருணையூரிற் சிறப்பிடம்பெறுவது குருக்கள் குடியிருப்பு. இங்கிருப்பவர்கள் சைவக் குருக்கள்மார். இவர்கள் வேதாரணியத்தொடர்புடையவர்கள் . வரணி ஆதீனத்தைச் சேர்ந்தவர்கள் . வரணி ஆதீனத்தவர் தாயுமான சுவாமிகள், அன்றியும் வேதாரணிய ஆதீனமும் இவர்கள்து , இது மறைசை ஆதீனம் எனவும் படும். இவ் ஆதீனப்பாலனத்திற்கானவையே வேதாரணியமும் எட்டி குடியும். இக்குருக்கள் குடியிருப்பில் உள்ளதுவேதாரணியேஸ்வரர் வித்தியாசாலை. இக்குருமார் பரம்பரைச் சிறப்புப் பற்றி நாவலர் பிரபந்தத் திரட்டிற்பரக்கக் காணலாம். இவர்கள் பரம்பரை பரம்பரையாக வடமொழி தென்மொழிப் புலமை வாய்ந்தவர்கள். வேதாகமத் தேர்ச்சி மிக்கவர்கள், சைவக் கிரியா முறைகளில் தமக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர்கள் . சுத்த சைவ சித்தாந்திகள். இக்குருக்கள்மாரே கப்புதூ முருகன் அர்ச்சகர்கள் .
தூ என்பது வெளியேனும் பொருளுடையது. இந்த தூ வெளிக்குங் கரவைவேலன் கோவைபாடிய சின்னத்தம்பிப்புலவருக்கு ந் தொடர்புண்டு. இப்பகுதி மக்கள் சின்னத்தம்பிப் புலவரை அலங்காரப் பந்தலிட்டு வரவேற்றுக்கெளரவித்தார்களாம். அப்பந்தத்துக்குரிய "கப்பு" - தூன் - ஒன்று நெடுநாட்களாக அகற்றப்படாதிருந்ததாம். அதனாற் “கப்புதூ" எனப் பெயர் வந்தது. சதாசிவையர் பதிப்பித்த கரவை வேலன் கோவையைக் காண்க.
தொடரும்......
No comments:
Post a Comment