Friday, August 26, 2022

J/KVM பழை மாணவர்கள் துணையால் விரைவில் பள்ளிக்கான புதிய கணனி கூடம்!


புலம்பெயர் மாணவர்கள் துணையால் கரணவாய் மகா வித்தியாலயத்திற்கு புதிய கணனி கூடம்  அமைத்து கொடுப்பதற்கு பழைய மாணவர்கள் முன்வந்துள்ளனர். நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கற்பித்தல் முறையிலும் புதுயுகம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கணனியின் தேவையும் அது குறித்த  அறிவும் அவசியமாகின்றது. இந்த நிலையில் பாடசாலையின் கணனி தேவை பிரதானம் பெறுகிறது, புலம்பெயர் பழைய மாணவர் ஒருவரின் துணையுடன் உருவாக்கபட்ட கணனிகள் காலம்  கடந்துள்ளதால்ப ழுதடைந்து செயலற்று போனதால் புதிய கணனி வசதி அவசியமாகியுள்ளது. 

பாடசாலையின் வசதிகள், தேவைகள் குறித்து பாடசாலை சமூகம் சுட்டி காட்டியிருந்த நிலையிலேயே புதிய வசதியுடன் கூடிய கணனி கூடம் கவனத்தில் கொள்ளப்பட்டது. பாடசாலைக்கான பல தேவைகள் கோரப்பட்டன, அதன் அடிப்படையில் நவீன கணனி கூடத்தையும்,  நவீன தொழில் நுட்பத்துக் கூடிய  பிரதியெடுக்கும் (Photocopy)வசதியையும் முதன்மையான பணியாக கருதி ஏற்படுத்தி கொடுப்பதற்கு புலம்பெயர் மாணவர்கள் முன்வந்துள்ளனர். 

ஆண்டுகள் பல கடந்தாலும் காலத்தின்  தேவை கருதி   புலம் பெயர் பழைய மாணவர்கள் ஒன்று சேர்ந்து சிறுதுளி பெருவெள்ளம் போல் சிறு சிறு உதவியானாலும் தேவையறிந்து உதவுவதே சால சிறந்தது, பழைய மாணவர்களின்  முயற்சிக்கு பாராட்டுக்கள். நீண்ட காலமாக பள்ளிக்கான பழைய மாணவர் சங்கம் புலம் பெயர் தேசத்தில்உருவாக்கப்படாத நிலையில் அண்மையில் கனடாவில் ஒன்று கூடி  பாடசாலையின் வசதிகள், தேவைகள் குறித்து கலந்துரையாடி அவசிய தேவைகளை தோற்றுவித்து கொடுக்க முன்வந்தமை வாழ்த்துகளுக்குரியது. 

கரணவாய் மகாவித்தியாலயத்தின் பழைய மாணவர்கள்  உலகின் பல்வேறு நாடுகளில் வசித்து வருகின்றனர் ஒவ்வொருவரும் வழங்கும் ஆதரவு   பாடசாலையை உயர்வு நிலைக்கு கொண்டு செல்லும். நாம் எல்லாம் புலம்பெயர்ந்து பல தேசங்களில் பல மொழிகளை பேசவும், எழுதவும்  முடியுது என்றால் எமக்கு அன்று அடிப்படை கல்வியை போதித்த பாடசாலையும், ஆசிரியர்களுமே  நாம் இன்று எந்த உயரத்தில் இருந்தாலும் அதற்கு பிரதான காரணம்  மாதா பிதா, குரு, தெய்வம் என்பர், பாடசாலையில் தான் குரு (ஆசிரியர்) எமக்கு அறிவை ஊட்டியவர் ஆகவே அந்த பாடசாலையை மறத்தலாகாது.  

பாடசாலையின் வளர்ச்சிக்காக புலம்பெயர்  பழைய மாணவர்கள், அயலவர்கள் ஊரவர்களாக முன்னெடுக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள். கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார்  கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும்.  என்பது போல் கற்றவர் கருணையால்  கல்வி, கலை, விளையாட்டு என பல துறைகளிலும் கரணவாய் மகா வித்தியாலயம் சிறந்து மிளிரட்டும். 

“ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற் கெழுமையும் ஏமாப் புறத்து”

No comments:

Post a Comment