சொந்த நாட்டை, பிறந்த கிராமத்தை,ஊரை விட்டு பிரிந்தாலும் தாயக உணர்வோடும், ஊரின் நினைவோடும் எண்ணங்களுடன் வாழ்ந்துவரும் இவ்வாறான புலம் பெயர் உறவுகளின் மனித நேயத்தை பாராட்டி, போற்றியே ஆக வேண்டும்.
புலம் பெயர்ந்து தாம் ஒன்று, தமது குடும்பம், தமது உறவுகள் என்று வாழ்வோர் மத்தியில் உறவுகளுக்கு அப்பால் வறுமையே வாழ்வாய் போன மக்களின் வாழ்விலும் மறுமலர்ச்சி பிறக்க வேண்டும் அவர்கள் வாழ்விலும் புத்துயிர் பெற வேண்டும் என்ற நல்ல சிந்தனையுடன் தான் பிறந்து வளர்ந்த சோளங்கள் என்ற கிராமத்திற்கு அண்டைய கிராமமான மண்டான் கிராமத்தில் வசித்து வரும் ஏழைதாயின் ஏக்கத்தையே புலம் பெயர் வாழ் சோளங்கன் வாழ் குடும்பம் ஒன்றின் உதவியினால் நிவர்த்தி செய்யப்பட்டது.
அன்றாடம் (தினம்)தொழிலுக்கு சென்றாலே அடுத்த நேர வாழ்வு நிலையில் வாழும் மண்டான் கிராமத்தை சேர்ந்த திருமதி.பிச்சையப்பா ராசு அவர்கள், தனக்கு அரச உதவியில் வீட்டு திட்டம் கிடைத்தாலும் வீட்டினை முழுமையாக பூரணபடுத்தவோ அல்லது வீட்டினை அறுக்கை செய்து தேங்கும் வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க போதிய வசதி இல்லை என்று கேட்டு கொண்டதிற்கு இணங்க, திருமதி. பிச்சையப்பா ராசு அவர்களின் வீட்டில் தேங்கும் வெள்ளத்திற்கான தீர்வும் அறுக்கை ஏற்படுத்தும் முகமாக மதிலும் கட்டி கொடுக்கப்பட்டதுடன் கல்வி கற்கும் பேர பிள்ளைகளுக்கான ஊக்குவிப்புக்களையும் வழங்குவதற்கும் முன்வந்துள்ள சோளங்கன் வாழ் குடும்பத்தினருக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
நான் பெரிது நீ பெரிது என்றில்லாம் நாம் என்றும் எம்மக்கள் என்றும் வாழ்வோம், எமக்கு முகம் தெரியாதோர் அறிமுகம் இல்லாதோர் என்று பலருக்கு பலர் உதவியிருக்கலாம்.
நாம் தினமும் கண்டு பழகிய உதவிய எம் கிராமம் எம் அயலவர் அயல் கிராமங்களில் வாழும் மக்களின் மனங்களில் மகிழ்ச்சி தோன்றி இன்பம் செழிக்க எம்மாலான சிறு உதவியை நல்கி அவர்கள் வாழ்வையும் மேம்படுத்துவோம். எமது கிராமத்தின் ஒவ்வொரு புலம் பெயர் உறவுகளும் எண்ணினால் உயர்வான சமூக விடியலை தோற்றுவிக்கலாம்.
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பது போல் சிறு துளி பெருவெள்ளமாக பலரும் இவ்வாறான திட்டங்களிற்கு உதவினால் எல்லோரும் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வினை வாழ முடியும்.
“எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்பது போல் வாழ்ந்திடுவோம்.
No comments:
Post a Comment