Saturday, May 22, 2021

முககவசம் முறையாக அணியாமல் வியாபாரம் செய்த நெல்லியடி வியாபாரிக்கு கொரோனா!


நெல்லியடி பழைய சந்தை  பகுதியில் முககவசம் முறையாக அணியாமல்  வியாபாரம் செய்த வியாபாரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த வியாபாரி முககவசத்தை முறையாக அணியாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த  நிலையில் பொது சுகாதார பணியாளர்களால்  கட்டாய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில்,  கடந்த 19ம் திகதி  மேற்கொள்ளப்பட்ட  பிசிஆர்  பரிசோதனை முடிவுகள்  நேற்றையதினம் வெளிவந்த போதே கொரோனா தொற்று உறுதி செய்யப்படடது. 

No comments:

Post a Comment