Thursday, May 20, 2021

சமூக இடைவெளியை கடைபிடியுங்கள் மக்களே மிகவும் அவதானம்!


உலகெங்கும் ஆட்கொண்டு வரும் கொரோனா நோய் தொற்று  பரவல்  படிப்படியாக கட்டுப்பாட்டிற்குள்  வந்து கொண்டுள்ள நிலையில்,  எங்கள் நாட்டிலும் எமது அண்டை நாடான இந்தியாவிலும்  தொற்று எண்ணிக்கை உயிரிழப்பு விகிதம்  அதிகரித்து செல்கின்றது.  

ஆகவே எம் உறவுகளே,  அரசினால் பிறப்பிக்கப்பட்டுள்ள சுகாதார நெறிமுறைகளை  பின்பற்றி சமூக இடைவெளிகள், முக கவசம்  என்பனவற்றை அணிந்து  அரசும், சுகாதார துறை பணியாளர்கள் முன்னெடுத்து வரும்  சமூக நடவடிக்கைகளிற்கு  ஒத்துளை இழப்புகள்ப்பு நல்கிடுவோம்.  

வளிபாடுகள், நன்மை தீமைகள், இழப்புகள் இவை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டியவைதான்  இருந்தாலும்,  நாமும் பாதுகாப்பாய் இருந்து ஏனையவர்களையும் பாதுகாத்திடும்  பொறுப்பும்  எம் ஒவ்வொருவரினதும் கடமை.  

அப்படியான ஒர் நோய் தொற்று  காலத்தில் வாழ்கின்றோம்.  எம் வீட்டு நிகழ்வுக்கு  அல்லது எமக்கு உதவுவோருக்கு ஒர் பாதிப்பு ஏற்படாத  நிலையை பார்க்க வேண்டியது  ஒவ்வொருவரினதும்  கடமை.  

தயவு செய்து  சுகாதார நடைமுறைக்கு உட்பட்டு எம்மையும் எம்மை சுற்றி இருப்பவர்களையும், எமது நண்பர்கள், உறவுகள், அயலவர்  எம்மக்கள், எம் தேசம் என்று  அனைவரையும் பாதுகாத்திட  எமது பங்களிப்பாக  சுகாதார துறை விதித்துள்ள  கட்டுப்பாடுகளை கடைப்பிடித்திடுவோம். 

No comments:

Post a Comment