கரணவாய் சோளங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை இரவு 8:30 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டில் இருவர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த இருவர் மந்திகை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும், வாள்வெட்டில் ஈடுபட்ட நபர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
இவ் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை தேடி பொலிசார் வலைவிரித்துள்ளனர். அப்பகுதி இளைஞர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் வாள்வெட்டுவரை சென்றுள்ளது.

No comments:
Post a Comment