Friday, February 12, 2021

நெல்லியடி மத்திய கல்லூரியில் கோவிட்-19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு!!


மாணவர்கள் மூலம் சமூகத்திற்கு விழிப்புணர்வூட்டும் நோக்கில் கோவிட்-19 தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நெல்லியடி மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.சுகாதார வைத்திய அதிகாரி, பொது சுகாதார பரிசோதகர் போன்றவர்களால் இது குறித்தவுரை மாணவர்களிற்கு வழங்கப்பட்டது. 

நேற்று வியாழக்கிழமை கல்லூரி அதிபர் கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு கலந்துரையாடலில் சுகாதார வைத்திய அதிகாரி செந்தூரன் பொது சுகாதார பரிசோதகர் எஸ்.ரவிவர்மா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிதத்தனர், இவ் நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment