கரணவாய் நவிண்டில் பகுதியில் உள்ள வீடொன்றில் விற்பனைக்கு தயாராக இருந்த கஞ்சா பொதிகள் இன்றையதினம்(09.02.2021) நவிண்டில் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்படி வீட்டை பொலிசார் சுற்றிவளைத்தபோது அங்கிருந்தவர்கள் தப்பி செல்ல முயற்சித்தனர் அப்போது நால்வர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு அவர்களது மோட்டார் சையிக்கில்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைக்காக கைது செய்யப்பட்டவர்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment