மோட்டார் சையிக்கிளில் வந்த இரு தரப்புக்களில் யார் முதலில் பெறுவது என்ற தகராறில் எரிபொருள் நிலைய பணியாளர் தாக்கப்பட்டுள்ளார். இவ் சம்பவம் நெல்லியடி எரிபொருள் நிலையத்தில் நேற்று செவ்வாய் இரவு(08.02.2021) இடம்பெற்றுள்ளது.
ஏற்கனவே வேறு சிலர் எரிபொருளை பெற்றுக்கொண்ட நிலையில், பின்பு வந்தவர்கள் அவரை விட தமக்கு முதலில் தருமாறு தகராறு செய்தபோது அவ்வாறு செய்யமுடியாது என்று எரிபொருள் நிலைய பணியாளர் தெரிவித்துள்ளார்.
அப்போது மோட்டார் சையிக்கிளில் பின்னதாக வந்தவர்கள் சாராய போத்தலால் வீசியதில் எரிபொருள் நிலைய பணியாளர் தலையில் காயமடைந்துள்ளார், இதனை தொடர்ந்து காயமடைந்த பணியாளர் மந்திகை அரசினர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
சாராய போத்தலை வீசி தகராறில் ஈடுபட்டவர்கள் தாங்கள் அணிந்துவந்த தலைகவசத்தை விட்டுவிட்டு ஒட்டமெடுத்தபோதும் அவர்கள் பயணம் செய்த மோட்டார் சையிக்கிள் இலக்கம் குறிக்கப்பட்டு பொலிசாரிடம் வழங்கப்பட்டதற்கு அமைவாக செல்லியடி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment