Monday, January 11, 2021

புறாப்பொறுக்கி எரிபொருள் நிலையம் மீண்டும் திறப்பு!


கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து மூடப்பட்ட எரிபொருள் நிலையம் நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஏ நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் சென்ற பகுதிகள் கரவெட்டி சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டு மேற்படி எரிபொருள் நிலையமும்  கடந்த சனிக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்டது. 

சம்பவதினம் பணியாற்றிய பணியாளர்களை தவிர்த்து வேறு ஊழியர்கள் பணியாற்றுவதாக கரவெட்டி சுகாதார பிரிவுக்கு உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து எரிபொருள் நிலையம் மீண்டும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment