வேக கட்டுப்பாட்டை இழந்த வாகனம் ஒன்று வல்லைக் கடலுக்குள் வீழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. நேற்று திங்கள்கிழமை காலை 7:30 மணியளவில் பருத்தித்துறை நோக்கி "றால்" ஏற்றிவந்த வாகனமே வேககட்டுப்பாட்டை இழந்த நிலையில் வல்லைக் கடலிற்குள் வீழ்ந்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது.
இவ் வாகனத்தில் இருவர் பயணித்தபோதும் அதிஸ்ட்டவசமாக காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர். வாகனங்களின் கட்டுப்பாடற்ற வேகத்தினால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment