மோட்டார் சைக்கிளில் மகளுடன் சென்று கொண்டிருந்த பெண்ணின் தாலியை திருடர்கள் அறுத்ததில் மோட்டார் சைக்கிளில் சென்ற தாயும் மகளும் விழுந்து காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மோட்டார் சையிக்கிளில் சங்கிலி அறுக்கும் திருடர்களின் கைவரிசை அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை(27.12.2020) தாயும் மகளுமாக வல்லை வீதியில் மோட்டார் சையிக்கிளில் சென்று கொண்டிருந்தபோது பிறிதொரு மோட்டார் சையிக்கிளில் பின்னால் சென்ற திருடர்கள் தாலியை அறுத்து சென்றுள்ளனர்.
இதனால் நிலத்தில் வீழந்து காயமடைந்த தாயும் மகளும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாலிக்கொடியை திருடர்கள் அறுத்து சென்றுவிட்டதாகவும், அறுக்கப்பட்ட தாiலிக்கொடி 13பவுண் எடையுடையது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:
Post a Comment