பளை பகுதியில் இடம்பெற்ற மரண நிகழ்வு ஒன்றிற்கு மண்டான் கிராமத்தில் இருந்து சென்றுவந்தவர்களே தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
இது குறித்து தெரியவருவதாவது, மண்டான் கிராமத்தை சேர்ந்த முன்னைநாள் போராளியான கிட்ணர் நவநீதன்(நீதன்) என்பவர் பளையில் திருமணம் முடித்து வாழ்ந்துவந்ததாகவுவும் கிளிநொச்சியில் வேலை செய்து வந்ததாகவும் வேலைக்காக கிளிநொச்சி சென்றபோது புதுக்காட்டு சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நவநீதன் மரணமடைந்துள்ளார்.
அவரது இறுதி கிரிகைகள் பளையில் இடம்பெற்றபோது அந்த நிகழ்வில் அவரது உறவினர் நண்பர்கள் மண்டான் கிராமத்தில் இருந்து சென்று பங்கு கொண்டனர்.
அங்கே கிளிநொச்சியில் இருந்து வந்து பங்கு கொண்டிருந்த சிலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே மரணவீட்டிற்கு சென்றவர்கள் சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கொரோனாவின் தாக்கம் யாழ் மாவட்டத்தில் அதிகரித்து செல்லும் நிலையில், சுகாதாரதுறையினர் கட்டுப்பாடுகளை அதிகரித்து நோய்பரவலை கட்டுப்படுத்த முனைந்துவருகின்றனர் அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து நாமும் பாதுகாப்பாக இருந்து ஏனையவர்களையும் பாதுகாத்திடுவோம்.

No comments:
Post a Comment