Friday, May 15, 2020

நெல்லியடி பொலிசாரால் மதுபான கடத்தல் முறியடிப்பு!

நெல்லியடி பொலிசார் கடந்த புதன்கிழமை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின்போது வகானங்களில் பதுக்கல் நடவடிக்கைகளிற்காக எடுத்து செல்லப்பட்டிருந்து கொண்டிருந்த பல இலட்சம் ரூபாய் பெறுமதியான மதுபானங்கள் ஜந்து இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்டன. 


தொலைத்தொடர்பு நிறுவனத்தின் முகாமையாளர் ஒருவரின் வாகனத்தில் சீருடை அணிந்த விற்பனை முகவரால் வடமராட்சிக்கான டீலருக்கு நுட்பமான முறையில் எடுத்துச்செல்லப்பட்டிருந்து கொண்ட பெருமளவு மதுபானங்களும் இதில் அடங்கும். 

பார் ஒன்றை இந்த டீலர் நடாத்துக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டதுடன்,  கைதானவர்களை பொலிஸ் அதிகாரி பிணையில் விடுவித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment