Saturday, May 16, 2020

நேற்றும் கடற்படையினர் 10 பேருக்கு கொரோனா உறுதி! இதுவரை 925பேருக்கு கொரோனா!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 935 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கனவே 925 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 10 பேரில் ஒன்பது பேர் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றொருவர் கடற்படைச் சிப்பாய் ஒருவரின் உறவினர்.
இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 449 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இதுவரை கொரோனாதொற்றால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன.

No comments:

Post a Comment