வடமராட்சி அத்தாய் பகுதியில் ஊரடங்கு அமுலில் இருந்தவேளையில் உறவினர்களிடையே இடம்பெற்ற மோதல் கோஸ்டி மோதலாகியதில் பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 7மணியளவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை உறவினர்களிடையே இடம்பெற்ற கருத்து முரண்பாடு சண்டையாக உருவெடுத்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் யுவதிகள், பெண்கள் உட்பட பலர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று இரவுவரை 3பேர் மட்டுமே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவத்தில் புலோலி தெற்கைச் சேர்ந்த 82வயதுடைய ராமு கனகசபை, மற்றும் அத்தாய் அல்வாய் கிழக்கைச்சேர்ந்த 20 வயதுடைய மகாலிங்கம் ஆஷிகா, 26வயதுடைய சிவானந்தராஜா விஜயன் ஆகியோர் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நெல்லியடி பொலிசார், இது தொடபாக மேற்கொண்ட விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment