வடமராட்சி கரவெட்டி பிரதேசசபைக்கு உட்பட்ட துன்னாலை வல்லை வீதியில்(மண்டானுக்கு) அண்மையில் அமைந்துள்ள கழிவு பொருட்கள் கொட்டும் இடத்தில் பாவனைக்கு உதவாத ரயர்களை எரித்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிக்கப்பட்ட பகுதியில் சிறியரக லொறி ஒன்றில் ஏற்றி வரப்பட்ட கழிவு ரயர்களை எரியூட்டியதால் அப்பகுதி கரும்புகையால் சூழப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் கரவெட்டி பிரதேச செயலகத்திற்கும் நெல்லியடி பொலிசாருக்கும் முறையிட்டதை தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிசார் ரயர்களை ஏற்றி வந்தவர், லொறி சாரதி, உதவியாளர், ரயர்களை எரியூட்டுவதற்காக அழைத்து வரப்பட்ட இருவர் என ஐவரை கைது செய்துள்ளதுடன் லொறியையும் பறிமுதல் செய்து நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். கழிவு ரயர்கள் சாவகச்சேரி பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment