Wednesday, May 13, 2020

சோளங்கன் கிராமத்துக்கு பெருமை சேர்த்த மாணவ செல்வங்களை வாழ்த்திடுவோம்!

2019ம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த.சாதரணதர(O/L) பரீட்சையில்  தேர்வு எழுதி அண்மையில் வெளிவந்த பரீட்சை பெறுபேற்றில் சிறந்த புள்ளிகளை பெற்று சோளங்கன் கிராமத்திற்கு பெருமை சேர்ந்த மாணவியர்களான செல்வி புஸ்பாகரன் டிலக்சிகா என்ற மாணவி 9A என்ற புள்ளியை பெற்றுள்ளதுடன் செல்வி அமிர்தலிங்கம் சசிரேகா என்ற மாணவி 8A புள்ளிகளையும் பெற்று அதி சித்தியடைந்துள்ளனர்.


ஊருக்கும் வீட்டுக்கும் பெருமை தேடிதந்துள்ள இவ் மாணவ செல்வங்கள்  மேலும் பல சிகரங்களையும் உயர்கல்வியையும் தொடர்ந்து கல்வியில் மேலும் பல சாதனைகளை நிலைநாட்டிட வேண்டும் என நாமும் வாழ்த்துவதில் பெருமைகொள்கின்றோம்.  'கல்வியே சிறந்த மூலதனம்' என்ற கோட்பாட்டிற்கு அமைய இவ் மாணவ செல்வங்களை முன்னுதாரணமாக கொண்டு எதிர்கால இளம் சமூகமும் கல்வியில் கரிசனை காட்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.

No comments:

Post a Comment