உலகை மிகப்பெரும் அச்சுறுத்திவரும் 'கொரோனா' என்ற நோய் தொற்றை எதிர்கொண்டுவரும் நோயாளிகளுக்காக தமது குடும்பம், சுகபோகங்களையும் தமது உயிரையும் துச்சமென நினைத்து சேவையாற்றிவரும் செவிலியர்களை நாமும் போற்றி வாழ்த்திடுவோம். இந்த ஆண்டை உலக சுகாதார நிறுவனம், உலகெங்கும் உள்ள செவிலியர்களை கௌரவிக்குமுகமாக 2020ம் ஆண்டை செவிலியர் ஆண்டாக பிரகடனம் செய்துள்ளது.
இலங்கை இந்தியா போன்ற பல நாடுகளில் அவர்களின் உழைப்புக்கெற்ற ஊதியம் வழங்கப்படாதபோதும் ஜரோப்பிய மற்றும் வடஅமெரிக்க நாடுகளில் அவர்களுக்குரிய உரிய ஊதியங்களும் சலுகைககளும் வழங்கப்பட்டே வருகின்றன.
அவ் நாடுகள், தற்போது கொரோனா நோய் தொற்றினால் அதிகரித்துவரும் நோயாளர்கள் அதிகரிப்பினால் மேலதிக பணி நேரங்களை மேற்கொண்டு சேவையாற்றிவரும் அவர்களை கௌரவப்படுத்தியும் நன்றியுடன் நினைவுகொள்கின்றது. அவர்களது அளப்பரிய சேவைக்காக அவர்களை 'முதன்மை பணியாளர்கள்' என்று வரையறைப்படுத்தி அவர்களிற்கான சம்பள அதிகரிப்பையும் மேலதிக சேவைகளையும் வழங்கி அவர்களது உழைப்பை கௌரவித்து வருகின்றது. "தம்முயிரை கொடுத்து பிறர் உயிரை காத்திடும்" இந்த செவிலியர்களை அவர்களுக்காக பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்ட உன்னத நாளில் நாமும் அவர்களை வாழ்த்திஜடுவோம்.
தற்போதுள்ள கொரோன நோய் தொற்றினால் நோயாளர்கள் தொகை அதிகரித்துள்ளபோதும் தாதியர்களிற்கான சம்பள அதிகரிப்பு இன்னும் பிற சேவைகளை வழங்கி செவியர்களை முதன்மை பணியாளர்கள் என்ற வரையறைக்குள் கொண்டுவந்து அவர்களது பணிக்கு ஊக்கமளித்து வருகின்றது.'தம்முயிரை கொடுத்து பிறர் உயிரை காத்திடும்' இந்த முதன்மை பணியாளர்களை நாமும் வாழ்த்திடுவோம்

No comments:
Post a Comment