Thursday, May 7, 2020

ரவுடி கும்பல் மூலம் செல்வந்தர்களை இலக்கு வைக்கும் நெல்லியடி பொலிசார்!

நெல்லியடியைச் சேர்ந்த வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், செல்வந்தர்கள் போன்றவர்களை பணத்துக்காக ரவுடிகும்பலை பயன்படுத்தி நெல்லியடி பொலிஸ் நிலையத்தின் தமிழ்பேசும் பொலிஸ் செயல்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது. கடந்தவாரம் கைது செய்யப்பட்ட ரவுடி கும்பலின் முக்கியஸ்தர் ஒருவர் சாட்சியாக மாறி காங்கேசன்துறை பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 


ரவுடி கும்பலின் முக்கியஸ்தர் வழங்கிய தகவலின் பிரகாரம்,  நெல்லியடியில் உள்ள பணபலம் வாய்ந்தவர்களின் வீடுகள், வாகனங்கள்,  ஸ்தாபனங்கள் போன்றவற்றுக்குள் கஞ்சா வைக்குமாறு ரவுடி கும்பலுக்கு இப்பொலிசார் அறிவுறுத்தி வந்துள்ளனர். இவ் நால்வரின் தேசிய புலனாய்வு பிரிவில் இருந்து வந்து நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ்  உத்தியோகத்தரே மேற்படி சம்பவத்தின் சூத்திரதாரியாக செயல்பட்டவர் என்றும் தெரியவந்துள்ளது.  

அதேபோல் இவ் பொலிஸ் நிலைய அதிகாரிக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரவுடி கும்பலை சேர்ந்தோர் கஞ்சாவை கொண்டு சென்று வைத்ததும்  இவ் பொலிசார் சென்று கைப்பற்றியதும் அதன் பின்னர் சிக்கிகொண்ட செல்வந்தருடன் பேரம் பேசுவார்கள்  பெரும் தொகை பயணத்தை அந்த வகதிபடைத்தவர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டதும் அவர்களை விடுவிப்பார்கள் என்றும், இவ்வாறான நடவடிக்கையால் பெரும் மனிதர்கள் பலர் பொலிஸ் மற்றும் றவுடி கும்பலின் சதிவலையில் சிக்குபட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல பொலிஸ் நிலையத்திற்காக சென்ற பெண்களும் பாலியல் தேவைக்காக இலக்கு வைக்கப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றள்ளதாக தெரியவருவதுடன், இதன் பின்னணியில் கைது குற்றம்சாட்டப்பட்டுள்ள நான்கு பொலிசாரில் தமிழபேசும் முஸ்லீம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன் இதனால் பொண்ணொருவர் தற்கொலைக்கு முயன்றசம்பவமும் இடம்பெற்றள்ளது.

No comments:

Post a Comment