Saturday, April 25, 2020

திரு.திருமதி. முருகேசு(சபா) சிரார்த்ததினத்தை முன்னிட்டு உலர் உணவு வினியோகம்!!

கரணவாய் மேற்கு சோளங்களைச்  சேர்ந்த திரு. திருமதி.  முருகேசு(சபா) சிவபாக்கியம்  அவர்களின் சிராத்த தினத்தை  முன்னிட்டு கொரோனா நோய் பரவலினால் வேலையிழந்து உள்ளவர்களிற்கான உலர் உணவு பொதிகள் இன்றைய தினம்(26.04.2020) வழங்கப்பட்டது.  



கனடாவில் வாழும்  அவர்களது பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின்  உதவியுடன்  கரணவாய்  மேற்கு,  தெற்கு  கரணவாய்  உள்ளிட்ட  பிரிவுகளிற்கு உட்பட்ட  மக்களிக்கு  கொடுக்கப்பட்டது.  தயாபரன்  தலைமையில்  இடம் பெற்ற உதவி பொருள்  கொடுக்கும் நிகழ்வு அவசியம்  தேவையானவர்கள் என கரணவாய்  பகுதியில் கொடுக்கப்பட்டது.  3000 ரூபா  பெறுமதியான ஒவ்வொரு பொதியும்  சுமார் 50 குடும்பங்களிற்கு  கொடுத்து உதவப்பட்டது. 


பாகுபாடின்றி  கரணவாய் பகுதியில் இவ்வினியோகம் பரவலாக அவசிய  தேவையுடையவர்களை  இனம் கண்டு  திரு.தயாபரன் அவர்கள்  செயற்படுத்தியிருந்தார்.  அவருக்கும்  தமது  பெற்றோர்,  தாத்தா, பாட்டியின்  சிராத்த தினத்தை முன்னிட்டு இவ்  உதவும் செயலை முன்னெடுத்த  பிள்ளைகள், பேரப்பிள்ளைகளிற்கும் சோளங்கள் இணையம் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றது.



No comments:

Post a Comment