Sunday, April 19, 2020

கரணவாய் மக்களின் மதினநேய பணிக்கு கருணை உள்ளம் கொண்ட புலம்பெயர் கரணவாய் உறவுகள் தொடர் பங்களிப்பு!!



நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண
நிலையில்(கொரோனாதொற்று) வேலையிழந்து பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள மக்களிற்கு உதவிட புலம்பெயர் கரணவாய்  மக்கள் தொடர்ந்து பங்களிப்பு செய்து வருகின்றனர். கரணவாய் பகுதிக்கு உட்பட்ட மக்களிற்கான உலர் உணவு நிவாரண பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. 


இந்த உதவிதிட்டம் மேலும் தொடர்வதற்கு புலம்பெயர் உறவுகள் நிதியுதவியை வழங்கிவருவதாக தெரியவருகின்றது. கரணவாய் தெற்கு, மேற்கு, மத்தி என்று கரணவாய் பிரதேசத்திற்கு உட்பட்ட தம் உறவுகளிற்கான உதவியை வழங்க முன்வந்த புலம்பெயர் வாழ் கரணவாய் மக்களிற்கு வாழ்த்துக்கள்.



No comments:

Post a Comment