Saturday, April 18, 2020

ஊர் உறங்கு நிலையிலும் கரணவாய் பகுதியில் திருடர்கள் கைவரிசை!

கொடிய கொரோனா பயமுறுத்தி வரும் நிலையில்,  திருடர்களுக்கும்  குறைவில்லை  நாடே ஊரடங்கு  பிறப்பிக்கப்பட்டு  உறங்கு நிலையில் இருக்க திருடர்கள் தங்கள்  கைவரிசையை காட்டி வருகின்றனர்.  கடந்த  சில நாட்களிற்கு முன்னர்  விவசாயி ஒருவரின் தோட்டத்திற்குள்  புகுந்த  திருடர்கள் விளைச்சலை  திருடியும்  பயிரை  சேதப்படுத்தியது மட்டுமல்ல,  நீர் பாய்ச்சுவதற்காக பொருத்தியிருந்த  மோட்டரையும்  திருடிச் சென்ற சம்பவம்  சோளங்கன் மழவிரான்  பகுதியில்  இடம் பெற்றுள்ளது. 


விதைத்தவன் வீட்டிற்குள்  கொரோனா அச்சத்தில்  முடங்கியிருக்க  திருடர்கள் அறுவடை செய்தது பெரும்  வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  பசி கொடுமை  உண்ண உணவு இல்லை  என்றால்  தோட்டத்தில் உள்ள மரக்கறிகளை  வழங்குவது  வடமராட்சி மண்ணிற்குரிய  சிறந்த பண்பு,  முன்னைய  காலங்களில்  உணவு பண்டமாற்றங்களை செய்து  உண்டு மகிழ்ந்த சமூகம்  தமிழர் சமூகம்.  

அவ்வாறான சமூகத்தில் இவ்வாறான  திருட்டு விசமிகள் இருப்பது கவலைக்குரியது.  திருடினது மட்டுமல்லாமல்  பயிரை  சேதப்படுத்தி  நீர் பாய்ச்சும்  மோட்டரையும்  திருடி சென்றது  திட்டமிட்ட திருட்டு நடவடிக்கையாகும்.  இது  குறித்து பொலிசாருக்கு வழங்கிய  தகவல் அடிப்படையில்  நெல்லியடி பொலிசார்  விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  விரைவில்  திருடர்கள் கைது  செய்யப்படுவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.  அப்போதே உள்ளூரர் திருடர்களா  வெளியூர் திருடர்களா கும்பலா என்பது  தெரியவரும். 

No comments:

Post a Comment