கொரோனா நோய் தொற்றின் காரணமாக நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நிலையால் வேலை இழந்து வீடுகளுக்குள் முடக்கப்பட்டுள்ள கரணவாய் தெற்கு பிரிவுக்குட்பட்ட மக்களுக்கான உலர் உணவு பொதிகள் இன்றையதினம் வழங்கப்பட்டன.
கடல் கடந்து நாடுவிட்டு நாடு புலம் பெயர்ந்தாலும் மண்மணம் மாறாத மனிதநேயம் மிக்க மானிடரின் உதவியால், கரணவாய் தெற்கு பிரிவில் வசிக்கும் சுமார் 75 குடும்பங்களுக்கான 2000 ரூபா பெறுமதியான உலர் உணவு உட்பட்ட உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.
இதற்கான உதவியை புலம்பெயர்ந்து டென்மார்க் நாட்டில் வசிக்கும் கரணவாய் தெற்கின் மைந்தர்களான கோடீஸ்வரன், யோகேஸ்வரன், மகேஸ்வரன் போன்ற மனிதநேய பண்பாளர்கள் வழங்கியுள்ளனர்.
நாடு விட்டு நாடு சென்றாலும் ஊரினதும், உறவுகளினதும் உயிர் துடிப்புடன் வாழும் அன்பர்களுக்கு சோளங்கள் இணையத்தின் வாழ்த்துக்கள்.

No comments:
Post a Comment