கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை மீறியோருக்கு நெல்லியடி நகரில் கிடைத்த தண்டனை. உலகை மிரள வைத்து கொண்டிருக்கும் உயிர்க்கொல்லி நோயான கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பாரிய முயற்சியை மேற்கொண்டுள்ளன.
ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்களிற்கு தொற்றியும் ஆயிரக்கணக்கானவர்களை பலி கொண்டுள்ள இவ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றன. உலகின் பல நாடுகள் அவசர காலநிலையை பிரகடப்படுத்தியும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தும் மக்களிற்கு மேலும் பரவாமல் கட்டுப்படுத்த முயன்று வருகின்றன.
அத்தியாவசிய தேவைகள் தவிர வெளியில் செல்வதை தவிர்த்தும், சமூக இடைவெளியை ஏற்படுத்தி கொள்ளுமாறு உலக சுகாதார நிறுவனம் உட்பட பல்வேறு சுகாதார அமைப்புகளும் கோரி வரும் நிலையில் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அரசுகள் பிறப்பித்துள்ளன.
எமது உயிரையும் பிறரின் உயிரையும் கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்கும் நோக்குடன் எடுக்கப்படும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கிடுவோம். அரசு பிறப்பித்துள்ள உத்தரவை துஸ்பிரயோகம் செய்து ஊரடங்கு நேரத்தில் வெளியே நடமாடிய சிலர் நெல்லியடியில் மாட்டிக் கொண்டனர். அவர்களை முழங்காலில் நிறுத்தி வைத்து தண்டனை வழங்கி எச்சரித்ததையும் காண முடிந்தது.
உண்மை தான்
ReplyDeleteவரவேற்கிறேன்
மாற்றம் மலரட்டும்