Wednesday, October 9, 2019

மண்டானில் உள்ள நண்பனின் வீட்டிற்கு சென்ற சிறுவனுக்கு வாள்வெட்டு!!

மண்டான் பகுதியில் நண்பரொருவரின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சிறுவனொருவன் வாள் வெட்டிற்கு இலக்கான நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் கரவெட்டி மேற்கை சேர்ந்த 17 வயதுடைய கிருபாகரன் என்ற சிறுவனே வாள்வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.

கரவெட்டி மேற்கில் உள்ள தனது வீட்டில் இருந்து, மண்டானில் உள்ள நண்பரின் வீட்டிற்கு துவிச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது மதுபோதையில் வந்த சிலர் சிறுவனை வாளால் வெட்டி விட்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதில் படுகாயமடைந்த சிறுவன் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment