Wednesday, October 9, 2019

வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு சென்று திரும்பியவர்களிடம் கொள்ளை!!

வல்லிபுர ஆலயத்திற்கு சென்றுவிட்டு திரும்பிய இளைஞர்களின் சங்கிலி, தொலைபேசி, மணிக்கூடு என்பன கொள்ளையிடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கள்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குஞ்சர்கடையடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆனைவிழுந்தான் சந்திக்கு அண்மித்த பகுதியில் சுமார் 30 வரையிலான கொள்ளையர்கள் இளைஞர்களை தாக்கி அவர்களிடமிருந்த 4 தொலைபேசிகள், ஒன்றரை பவுண் தங்கச்சங்கிலி, ஒரு மணிக்கூடு என்பனவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பருதித்துறை பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment