கடந்த திங்கள்கிழமை முதல் கடும் காற்று வீசி வருவதால் வல்லைவெளி ஊடாகப் பயணிப்போர் வெகு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கடும் காற்றினால் வல்லை வெளியில் உள்ள உப்பு மண் அள்ளுண்டு சைக்கிள் ஒட்டிகளுக்கு சிரமங்களைக் கொடுத்து வருகின்றது.
அத்துடன் இவ் வீதியில் பயணிக்கும் மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளோட்டிகள் பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி செல்லும் போது காற்றை எதிர்கொண்டு வண்டிகளை ஒட்ட முடியாது தத்தளிக்கின்றார்கள். இதேவேளை கடும் காற்று வீசுவதால் வடமராட்சி மீனவர்கள் பலரும் கடந்த இரு நாட்களுக்கு மேலாக மீன் பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இதனால் மீன் வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
கடந்த மே மாதம் தொடக்கம் செப்டம்பர் மாதம் வரை தென்மேல் பருவபெயர்ச்சி காற்றான சோழகக்காற்று வீசி வருகின்ற போதிலும் அதனைவிட மிக மோசமாக காற்று தற்போது வீசுகின்றது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment