சோளங்கன் மண்ணில் அருள்பாலித்து கொண்டிருக்கும் மதுரை மீனாட்சி அம்மனின் வருடாந்த திருவிழா கடந்த வியாழக்கிழமை(08.08.2019) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 10 தினங்கள் இடம்பெறும் திருவிழா நாளையதினம்-வெள்ளிக்கிழமை(23.08.2019) தேர் திருவிழாவும், நாளை மறுதினம் சனிக்கிழமை இடம்பெறவுள்ள தீர்த்தத்துடன் நிறைவுபெறுகின்றது. இன்றையதினம் சப்பறத் திருவிழா மிகவும் சிறப்பாக இடம்பெற்று அம்மன் வீதி உலாவந்து கிராம மக்களுக்கு அருள்பாலித்த கண்கொள்ளா காட்சியை காணமுடிந்தது.

No comments:
Post a Comment