Monday, August 26, 2019

கரவெட்டியில் அம்மாச்சி உணவகம்!!

கரவெட்டி பகுதியில் விரைவில் அம்மாச்சி உணவகம் அமைக்கப்படவுள்ளது. அதற்கான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

கரவெட்டி பிரதேச செயலகத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நாட்டிற்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்ட நடமாடும் சேவையில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நான் விவசாய பிரதி அமைச்சராக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி விவசாயிகள் விடயத்தில் அதிகமாக கவனம் செலுத்துவேன். இங்கு 40 வீதிமான மக்கள் விவசாயத்தையும், கடல் வளத்தையும் நம்பி உள்ளனர். மேலும் வேறு மாவட்டங்களில் இல்லாத நடைமுறை யாழ் மாவட்டத்தில் பின்பற்றப்படுகிறது அதுவே பத்துவீதம் கழிவு நடைமுறை இதனால் விசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதற்காக உழவர் சந்தை ஒன்று அமைக்கப்பட வேண்டும் அதன் மூலம் விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும் எனவும் அங்கஜன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment