Friday, December 7, 2018

கரணவாயில் வயோதிபர் கிணற்றில் வீழ்ந்து பலி!

பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்த வயோதிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நேற்று வியாழக்கிழமை காலை கரணவாய் மத்தி நவிண்டில் பகுதியில் இம்பெற்ற இச் சம்பவத்தில் ம.தெய்வேந்திரம்(வயது73) என்பவரே உயிரிழந்துள்ளார். 


பார்வை குறைபாடு உள்ள வயோதிபர் வெளியில் சென்ற போது பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரழந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற கரவெட்டி மரணவிசாரணை அதிகாரி வே.பாஸ்கரன் விசாரணையினை மேற்கொண்டு சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment