சோளங்கன் பகுதியில் கடந்த வெள்ளி இரவு 11 மணியளவில் கத்திமுனையில் கொள்ளை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. சோளங்கன் "மாணிக்கவளவு" என்ற பகுதியில் வசித்துவரும் அமரர் மயில்வாகனம் பொன்னம்பலம்(பூபதி) அவர்களது புதல்வரின் வீட்டிலேயே இவ் திருட்டு சம்பவம் நடைபெற்றது.
வீட்டின் உரிமையாளர் வீட்டில் இல்லாத நிலையில் முகமூடி அணிந்து வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கே தூங்கி கொண்டிருந்த சிறுவனின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு வீட்டாரை பயமுறுத்தி திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த கைத்தொலைபேசியை எடுத்து தண்ணீர் தொட்டிக்குள் போட்டுவிட்டு தொலைபேசி அழைப்புக்கள் அனைத்தையும் துண்டித்துவிட்டே வீட்டிற்குள் சல்லடை போட்டனர்.
கத்தியை தமது மகனின் கழுத்தில் வைத்துக்கொண்டு பயமுறுத்தியதால் சிறுவனின் உயிருக்காக வீட்டார் மௌனத்துடன் இருக்க, வீட்டில் இருந்த 40 பவுணிற்கு மேற்பட்ட நகைகளை திருடிச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நகைகளில் அருகே அமைந்துள்ள கருப்பையடி அம்மன் ஆலய நகையும் அடங்கும் என்ற தெரிவிக்கப்படுகின்றது. திருடப்பட்ட வீட்டின் உரிமையாளரே கருப்பையடி அம்மன் ஆலயத்தின் பொருளாளராகவும் உள்ளார். இது குறித்து விசாரணைகளை நெல்லியடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment