நெல்லியடி- யாக்கரு பகுதியில் வீதியில் சென்ற பெண் ஒருவரின் சுமார் 50ஆயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசியை பறித்துக்கொண்டு தப்பியோடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.
யாக்கரு பிள்ளையார் கோயிலுக்கு நேற்று முன்தினம் வந்த பெண் ஆலயத்திற்கு சென்று வழிபட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் அவரலைப் பின்தொடர்ந்த மூவர் தீடிரென அவரின் கைபேசியினை அபகரித்துக்கொண்டு தப்பியோனடினர். இதனை அப்பகுதியில் உள்ள ஒய்வு பெற்ற கிராமசேவையாளர் நேரில் பார்த்துள்ளார். கைபேசியை பறிகொடுத்த பெண்ணும் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார். துன்னாலை பகுதியைச் சேர்ந்த இருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர். கைதானவர்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட கைபேசியும் மீட்கப்பட்டது. அத்துடன் அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டது. கைதான சந்தேக நபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முன்நிறுத்தப்படவுள்ளனர்.
No comments:
Post a Comment