Wednesday, March 14, 2018

துயர் பகிர்வு


திருமதி.சண்முகநாதன் புவனேஸ்வரி
சோளங்கன், கரணவாய் மேற்கு. கரவெட்டி

யாழ் கரணவாய்மேற்கு சோளங்கனை பிறப்பிடமாகவும்இ வதிவிடமாகவும் கொண்ட திருமதி.சண்முகநாதன் புவனேஸ்வரி அவர்கள் நேற்றையதினம் இறைபதம் அடைந்தார் என்ற துயர செய்தியினை ஆழ்ந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.

ஆன்னார் சண்முகநாதன் அவர்களின் ஆருயிர் துணைவியும், காலம் சென்ற திரு.திருமதி.இரத்தினம் பிள்ளையம்மா தம்பதிகளின் அன்புமகளும், காலம் சென்ற கிருஸ்னபிள்ளை(மைனர்), ஜெகதீஸ்வரன்(சிறி-சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும், சாந்தினி, பவா(லண்டன்), சூரியகுமார்(சூரி), சந்திரகுமார்(சந்திரன்-லண்டன்), பிரேம்குமார்(பிரேம்-அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும் ஆவார். மருமக்கள்,பேரப்பிள்ளைகள் குறித்த விபரங்கள் அறிந்து கொள்ள முடியாதமையினால் இணைத்து கொள்ளப்படவில்லை.

அன்னாரின் இறுதிகிரிகைகள் அன்னாரது இல்லத்தில் இடம்பெற்று பூவரசன்திட்டி இந்து மையாணத்தில் தகனம் செய்யப்படும்.

தகவல்:
உறவுகள்

No comments:

Post a Comment