நெல்லியடி கப்பூது வீதியில் இன்று அதிகாலை வாள்வெட்டு குழுவினர் அட்டகாசம். நெல்லியடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வாள்வெட்டு குழுவினர், கொடிகாமத்தில் இருந்து அவ் வீதி ஊடாக பயணம் செய்த நால்வரை இடைமறித்து வெட்டுவதற்கு வாளால் ஒங்கியுள்ளனர். இதை தொடர்ந்து மேற்படி நால்வரும் தாம் பயணித்த மோட்டார் சையிக்கிளை கைவிட்டு ஒட்டம் பிடித்துள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் பயணித்த ஒரு மோட்டார் சையிக்கிளை கொத்தி சேதப்படுத்திவிட்டு மற்றைய மோட்டார் சையிக்கிளை எடுத்து கொண்டு சென்றுள்ளனர். சிறிது நேரத்தின் பின்னர் அப்பகுதிக்கு வந்த மோட்டார் சையிக்கிளில் பயணம் செய்த நால்வரும் கொத்தி சேதப்படுத்தப்பட்ட தமது மோட்டார் சையிக்களை எடுத்துக்கொண்டு சென்றுள்ளர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment