கரணவாய் மண்டான் காட்டுப் பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்றிரவு மீட்கப்பட்டதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் உச்சில் வீதி கரவெட்டி மேற்கைச் சேர்ந்த பாலசுந்தரம் (வயது-60) எனத் தெரிவிக்கப்பட்டது.மேற்குறித்த நபர் பத்து தினங்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளதாகவும் நேற்றைய தினம் அப் பகுதியில் சடலமாக காணப்பட்ட தாகவும் பொலிஸார் கூறினர்.
சடலம் பழுதடைந்துள்ளமையால் இவர் எட்டு தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்காலம் எனச் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.சடலத்தின் அருகில் நச்சுப் போத்தல் ஒன்றும் காணப்பட்டிருந்த நிலையில் மேலதிக விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment