Saturday, May 27, 2017

வல்வெட்டித்துறையில் ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம்!

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான பாக்குநீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்த சாதனை நாயகன் நினைவாக வல்வெட்டித்துறையில் 75 மில்லியன் ரூபாய் செலவில் நீச்சல் தடாகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் வல்வெட்டித்துறை உதய சூரியன் கடற்கரையில் இடம்பெற்ற இவ் நிகழ்வில் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், மத்திய, மாகாண அமைச்சர்கள், பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment