Monday, May 15, 2017

பொலிசாரை கண்ட மாட்டு திருடன் தப்பியோட்டம் மாடு பொலிஸாரால் மீட்பு!

திருடிச் செல்லப்பட்ட மாநாடு ஒன்றை பொலிஸாரின் ரோந்து வாகனத்தை கண்டதும் கைவிட்டுவிட்டு தப்பியோடிள்ளார். நேற்று முன்தினம் இரவு நெல்லியடி பொலிஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது துன்னாலை பகுதியில் மாடு ஒன்றை கொண்டுவந்தவர்கள் பொலிஸாரைக் கண்டதும் மாட்டைவிட்டு விட்டு தப்பியோடியுள்ளனர்.

மாட்டை பொலிஸ் நிலையம் கொண்டுவந்த பொலிஸார் அதன் உரிமையாளர் இருந்தால் உரிய ஆதாரத்தை காட்டி பெற்றுக்கொள்ள முடியும் என நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment