அல்வாய் பகுதியில் பொது மக்களை அச்சுறுத்திவந்த ஆட்டுக்குட்டி என்று அழைக்கப்படும் நபரொருவரை தாம் கைது செய்துள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு மாதங்களிற்கு முன்னர் அல்வாய் பகுதியில் இருவரை வாளால் வெட்டியதுடன் இரவு வேளை வாள்களுடன் நடமாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் அம்மக்கள் பாதுகாப்புதேடி பருத்தித்துறை நீதிமன்றிற்கு முன்னால் உள்ள ஆலயத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இது சம்மந்தமாக விசாரணை மேற்கொண்டுவந்த பருத்தித்துறைப் பொலிஸார் ஏற்கெனவே மூவரை கைது செய்திருந்தனர்.
மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய “ஆட்டுக் குட்டி” என்றநபரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்ததாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment